யாழ்ப்பாணத்தில் பரவும் ஆபத்தான நோய் ..! மக்களுக்கு சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை ..👇👇 அதிகம் பகிருங்கள் .👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 499
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  807
  Shares

யாழ்ப்பாணத்தில் புகையிலையைப் பயன்படுத்துவ­ தால் வாய்ப் புற்று நோயாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுகின்றனர்.
புற்றுநோயைக் கட்டுப்படுத்தவே இறுக்கமான நட­ வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்­ வாறுவடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான நாடாளு­ மன்றஉறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலை­ மையில் நேற்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் புகையிலை விற்பனையாளர்க­ ளின் பிரச்சினை தொடர்பாகப் பேசப்பட்டது. அதன்போது பணிப்பாளர் மேலும் தெரிவித்தாவது:
யாழ்ப்பணத்தில் பொதுச் சந்தைகளிலும், கடைகளி­ லும் மெல்லுவதற்கு புகையிலையை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
புகையிலையை புகைப்பவர்களை விட வாயில் மெல்பவர்களுக்கே புற்று நோயின் தாக்கம் அதிக­ ளவில் ஏற்படுகின்றது.
நாம் மனிதாபிமான அடிப்படையில் சிறு தொழிலா­ ளிகளை பார்த்தால் எமது மாவட்டத்தில் வாய்ப் புற்று நோயாளர்களின் எண்ணிகையில் அதிக­ ரிப்பேஏற்படும். எனவே பொதுமக்களின் நல­ னைக் கருத்தில் கொண்டே சில இறுக்கமான நடை­ முறைகளை நடைமுறைப்படுத்துகின்றோம் என்­ றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா கருத்துதெரிவிக்கையில்:
புகையிலை செய்கையாளர்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கை நடைமுறைப்படுத்தப்படும் வரை யாழ்ப்­ பாணத்தில் உள்ள பொதுச் சந்தைகளில் கடைகளில் புகையிலை விற்பவர்களுக்கு எதிராக பொதுச் சுகா­ தார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது.
கொழும்பு அரசு 2020 ஆம் ஆண்டு புகையிலைச் செய்கையை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்று அறிவித்ததுடன் விவசாயிகளுக்கான மாற்­ றுப்பயிர்ச் செய்கையை ஏற்படுத்திக் கொடுப்பது என்று கூறியது.
ஆனால் பின்னர் இடம்பெற்ற அமைச்சு மட்டக்கூட்­ டத்தில்புகையிலைச் செய்கையாளர்களுக்கு மாற்­ றுப்பயிர்ச் செய்கையை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை அவர்கள் புகையிலை விற்பனை செய்ய முடி­ யும்என்று கூறியிருந்தது.
எனவே எமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வேலையை சுகாதார உத்தியோகத்தர்கள் செய்யாதீர்கள் என்றார்.
அதன்பின்னர் கருத்துத்தெரிவித்த சுகாதாரப் பணிப்பாளர், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுச் சந்தைகளில் வாயில் உமிழும் புகையிலை விற்பவர்களையே இனங்கண்டு அவர்களுக்கு எதி­ ராகச் சட்ட நடவடிக்கை எடுக்கின்றனர்.
உமிழும் புகையிலையை விற்பனை செய்வதாலும் அதனை வாங்கி உண்பவர்கள் வாய்ப் புற்று நோய்க்கு ஆளாகின்றனர். அதிலும் அதிகளவான வாய்ப்புற்று நோயாளர்களை கொண்ட மாவட்ட­ மாக யாழ்ப்பாணமே விளங்குகின்றது என்றார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

உறக்கும் போது உங்களை பேய் அமத்துகிறதா?...
இன்றைய நாளும் இன்றைய பலன்களும்..!
அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றிவிடுகின்றீ...
சுவிஸில் இருந்து நாடு கடத்தப் படும் அப...
போட்டோவ பார்த்ததும் ஹாலிவுட் நடிகை என்...
உயர் அதிகாரிகள் முன் பெண்கள் நிர்வாண அ...
திருமணம் நடந்து 15 நிமிடத்தில் நடந்த க...
நட்சத்திர கலைவிழா சென்ற தமிழ் சினிமா ப...
யாழ்ப்பாணத்தில் திருமண வீடொன்றில் நடந்...
இலங்கை அகதி ஒருவர் சுவிட்சர்லாந்தில் அ...
கொழும்பு தனியார் வைத்தியசாலை தாதி ஒருவ...
கணவனின் கேவலமான செயலால் மனைவி எடுத்த த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 499
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  807
  Shares