பட்டபகலில் புகைப்படத்தில் இருப்பவன் செய்த கேவலமான செயல் ..👇 CCTV ஆதாரம் இருந்தும் பொலீஸார் உண்மையை மறைப்பதாக பெண் குற்றச்சாட்டு..👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 382
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  762
  Shares

தமிழகத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குழந்தையை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் காவேரி தெருவைச் சேர்ந்தவர் அனிதா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமை காலை 9 மணியளவில் தனது 1 வயது மகளான சுபாஷினிக்கு வீட்டின் வராண்டாவில் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்.
அதன் பின் குழந்தையான சுபாஷினி வீட்டின் வராண்டாவில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று குழந்தை அலறும் சத்தம் கேட்டுள்ளது.
இதைக் கேட்டு வெளியே வந்த தாய் குழந்தையை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் குழந்தையை மர்ம நபர் ஒருவர் தூக்கிக் கொண்டு ஓட முயற்சித்தார்.
உடனடியாக அவர் வீட்டில் வைத்திருந்த கம்பை எடுத்து அடிக்க பாய்ந்த உடன் அந்த நபர் குழந்தையை விட்டுவிட்டு வேகமாகப் போய்விட்டார்.
இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தாரிடம் இது குறித்து அவர் கூறியதால், அவர்கள் அந்த நபரை விரட்டி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையில் அவன் பெயர் நிப்பான் மேஸ் எனவும் அஸ்ஸாம மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்ததால், பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து குழந்தையின் தாய் அனிதா கூறுகையில், பொலிசார் அவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காலை முதலே குழந்தையை திருடும் நோக்கில் தான் அவன் எங்கள் தெருவை பலமுறை சுற்றி வந்துள்ளான்.
அதன் பின் ஆளில்லாத வீடுகளைப் பார்த்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளான். இது அருகில் இருக்கும் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாகவும், ஆனால் பொலிசார் நடந்த சம்பவங்களைப் பத்திரிகையாளர்களிடம் சொல்லாமல் மறைப்பதாகவும் கூறியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 382
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  762
  Shares