தொழிலதிபராக மாறிய கல்லூரி மாணவன் ..! தோசையால் என்று சொன்னால் நம்புவீர்களா…? நீங்களே பாருங்கள் பாராட்ட நினைத்தால் பகிருங்கள்..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 604
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  984
  Shares

சென்னையில்தனியார் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல்மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்படித்துக் கொண்டிருந்த ஈஸ்வர் எனும் மாணவர் ஒரு தோசை விரும்பி.
இவர்சென்னையில் கிடைக்கும் மொறு, மொறுப்பானபேப்பர் ரோஸ்ட்நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் ஒருபோதும் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தார்.
அதனால் அவருக்குள் தோசை தயாரிக்கும் தானியங்கி மிஷின் தயாரிக்க வேண்டும் என்ற யோசனைஏற்பட்டது.
பின் 2011-ம் ஆண்டு கல்லூரியின் முதல் ஆண்டு முடிவில், ஈஸ்வரும் அவரது நண்பர் சுதீப்பும், தோசை மிஷின் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.
இந்த இரு நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினரிடம்இருந்து பண உதவி பெற்றனர். ஆனால், அவர்களின் திட்டத்துக்கு மேலும் அதிகப் பணம் தேவைப்பட்டது.
எனவே, ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி பகுதி நேரமாக பணியாற்ற அவர்கள் தயாராக இருந்தனர்.
கல்லூரி விழாவில், இருவரும் ஒரு ஃபுட் ஸ்டால் அமைத்து, அதில் சென்னையில் அரிதாகக் கிடைக்கும், வடாபாவ் மற்றும் ஜல் ஜீரா உணவுவகைகளைவிற்பனை செய்யத் திட்டமிட்டனர்.
ஆனால் இந்த உணவுப் பொருட்களைத் தயாரிக்க தேவைப்படும் மளிகைப் பொருட்கள் வாங்கப் பணம் இல்லை.
எனவே,முதலில் சிறிதளவு பணத்தில்உணவு கூப்பன்களை ஈஸ்வர் அச்சிட்டு, அந்தக் கூப்பன்களை கல்லூரி வளாகத்தில் விற்பனை செய்தார்.
வடாபாவ் கூப்பன் விலைரூ.15, விழாவுக்கு முன்பாக ஐந்துகூப்பன்கள் வாங்குவோருக்கு 10 ரூபாய்க்குகூப்பன் வழங்கப்படும் என தள்ளுபடி விலையில் கூப்பன்களை விற்றனர்.
அதன் மூலம் ஸ்டால் தொடங்கும் முன்பே அனைத்துக் கூப்பன்களும் விற்று முடிந்து விட்டது. பின் அந்தப் பணத்தை வைத்து மளிகைப் பொருட்கள்வாங்கினார்கள்.
அதை தவிர ரூ.15,000 லாபமும் கிடைத்தது. அதன் பின்னர் ஈஸ்வர், சுதீப் இருவரும், இரண்டாவது ஆண்டு படிக்கும்போது, கல்லூரி நேரம் முடிந்ததும், சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்தனர்.
அதன் மூலம் அவர்களுக்கு மாதம் ரூ.5,000 சம்பளம் கிடைத்தது. அதை தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில்நடைபெற்ற வடிவமைப்புப் போட்டிகளில் பங்கேற்று பணப் பரிசுகளைப் பெற்றார்கள்.
அதில் இருந்து மூன்று லட்சம்ரூபாய் வரை சேமித்தார்கள். அவர்கள் 2012-ம் ஆண்டு முதலாவது தோசா மேட்டிக்(Dosamatic) உருவாக்கினர்.
பின்னர் இருவரும், சேர்ந்து தங்கள் கல்லூரிக்கு அருகில்உள்ள சாலையோர இட்லி விற்கும் கடையை அணுகினர்.
அந்த கடையின் உரிமையாளருடன் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டு, வார இறுதி நாட்களில், இருவரும் கல்லூரியில் இருந்து தோசை எந்திரத்தை கடைக்கு எடுத்துச்சென்றனர்.
அதை வைத்து அந்த கடையின் உரிமையாளர் தோசை தயாரிப்பார். அதன் மூலம் தலா 20 ரூபாய் விலையில் 100-150 தோசைகள் வரை விற்றார்.
ஒவ்வொரு தோசைக்கும் 5 ரூபாய் என்ற கணக்கில் இருவருக்கும் வருமானம் கிடைத்தது.
அதேபோல் அந்த இட்லி கடையில், தோசை எந்திரத்தை வைத்து 4 மாதங்கள் சோதனை செய்தனர்.
அதன் மூலம் தயாரித்த தோசையையும் மக்கள் விரும்பிசாப்பிட்டனர். மேலும் அந்த தோசையின் அதன் தரம், சுவை குறித்து எந்தவித புகாரும் வரவில்லை.
அதன் இருவரும் 150 கிலோவில் இருந்த தோசை எந்திரத்தின் எடையை 60 கிலோவாக குறைத்து சிறிய எந்தரமாக மாற்ற முடிவு செய்தனர்.
அவர்களின் மாதிரி இயந்திரத்தைப் பார்த்த, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முழுமையாகமுடிக்காத அலஸ்டய்ர் என்பவர், அந்தக் குழுவில் இணைந்து, 9 மாதங்கள் பணியாற்றினார்.
ஆரம்பத்தில் 10-20 தோசைகள் மட்டுமே தயாரித்த எந்திரத்தை அலஸ்டய்ர் அதிகமாக மேம்படுத்தினார்.
அதன் பின்னர், தான் தொடர்ந்து 100 தோசைகள் தயாரிக்கும் திறனை அந்த எந்திரம் பெற்றது.
2013-ம் ஆண்டு இந்தியன் ஏஞ்சல் நெட் ஒர்க் மூலம் இவர்களின் ஸ்டார்ட்அப் நிறுவனம் 1.5 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றது.
அப்போது அவர்கள் பொறியியல் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது ரூ.1.2 லட்சத்திற்கு முதல் எந்திரத்தை டெலிவரி கொடுத்தனர்.
அதன் பின்னர், அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. 2014-ல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 100 எந்திரங்களை விற்பனை செய்தனர்.
பின் இருவரும் சேர்ந்து முகுந்தாஃபுட்ஸ் என்ற கிச்சன்ரோபாடிக் நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
அந்த நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் 6 கோடி ரூபாய்க்குவருவாயை ஈட்டியது.
இப்போது அவர்களின் எந்திரம், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரி கேன்டீன்கள், ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ஆகியநிறுவனங்களிலும் உபயோகிக்கப்பட்டது.
இது வணிகரீதியான எந்திரம் என்பதால், இப்போது 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த தோசை எந்திரம் தற்போது 1 மணி நேரத்தில் 50-60 தோசை தயாரிப்பதுடன் தொடர்ச்சியாக 14 மணி நேரம் இயங்கக் கூடிய தன்மையை பெற்றுள்ளது.
இந்த தோசை எந்திரத்தில் தோசை மாவு, ஆயில், தண்ணீர் ஆகியவற்றை தனித்தனி கண்டெய்னர்களில் போட்ட பின் தோசையின் அளவு, தோசையின் அடர்த்தி ஆகியவற்றையும் செட் செய்துக் கொள்ளவேண்டுமாம்.
இதுவரை அவர்கள், 500 எந்திரங்களை விற்றுள்ளனர். அதில் 60 சதவீதம் இந்தியாவில் மட்டும் விற்க்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜேர்மனி, இலங்கை, துபாய் மற்றும்மியான்மர் நாடுகளில் 40 சதவிகிதம் அளவுக்கு இந்த இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
முதன் முதலாக இந்த எந்திரம், உத்தரகாண்ட் மாநிலம்ரிஷிகேஷில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்கு விற்பனை செய்யப்பட்டதாம்.
இது தவிர, 6-12 மாதங்கள் வரை கெடாமல் இருக்கக் கூடிய தோசாமிக்ஸ், சட்னி வகைகள் ஆகியவற்றையும் தோசாமேட்டிக் ஸ்டோர்என்ற பிராண்ட் பெயரில் விற்பனைசெய்தனர்.
தோசாமேட்டிக் ஸ்டோர்என்ற பிராண்ட் பெயரில், ரெடி மிக்ஸ் தோசை மற்றும்சட்னி வகைகள் விற்பனைசெய்யத் தொடங்கினர்.
இவர்களின் மிக்ஸ் வகைகள், 100 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள், வரும் நாட்களில் 25 கோடி ரூபாய் நிதிதிரட்டி, வீடுகளில் பயன்படும் தோசாமேட்டிக் மிஷின்கள் தயாரிக்க உள்ளனர்.
தங்களின் தயாரிப்புகளுக்கு சந்தையில் உள்ள வரவேற்பைப் பொறுத்துஅடுத்த நிதிஆண்டில் ஆண்டு வருவாயை 100 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தவும்திட்டமிட்டுள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 604
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  984
  Shares