இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 510
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  890
  Shares

இன்றைய பஞ்சாங்கம் 06-03-2018, மாசி 22, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 12.57 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சுவாதி நட்சத்திரம் இரவு 09.04 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 09.04 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். முருக வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 10.30 மணி முதல் 11.06 மணி வரை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
3/6/2018
இன்றைய ராசிபலன்
மேஷம்
மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
மிதுனம்
மிதுனம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்
கடகம்
கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலை பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.
கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவு  கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
துலாம்
துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். போராட்டமான நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவதுநல்லது. அநாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்
களை உதாசீனப்படுத்த வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
தனுசு
தனுசு: தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். சிறப்பான நாள்.
மகரம்
மகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும் நம்பிக்கைக்குறியவர் களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சி தங்கும் நாள்.
மீனம்
மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

Raiza Live video Ada pongayaa
சந்தானம் மருத்துவமனையில் அனுமதி
இப்படியும் ஒரு விமான இறங்கு தளம்..!
அமெரிக்கா ஜனாதிபதியின் மகளுக்கு நடிகை ...
வெறும் தரையில் உறங்குபவரா நீங்கள்..? இ...
குடி போதையில் இளம் பெண் செய்த செயல் .இ...
கோழியுடன் உடலுறவு கொண்ட இளைஞன் .அடச்சி...
தமிழ் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் மற்று...
பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு திடீர் ...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்...
இலங்கையில் வன்முறை தீவிரம். வாட்சப் மற...
கனடா டாக்டர்களின் மனிதாபிமான செயல் ......

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 510
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  890
  Shares