உறக்கமின்மை உடல் எடையை அதிகரிக்கும்

உறக்கமின்மை உடல் எடையை அதிகரிக்கும்

உறக்கமின்மை உடல் எடையை அதிகரிப்பதற்கு வழிகோலும் என விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறு பிராயத்தில் போதியளவு உறக்கமின்றி அல்லலுறும் சிறுவர் சிறுமியரின் உடல் பருமணடைவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உறக்கத்திற்கும் உடல் எடை அதிகரிப்பிற்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறு வயதில் போதியளவு உறங்காத சிறுவர் சிறுமியரின் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக நியூசிலாந்து ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மூன்று முதல் ஏழு வயது வரையிலான 244 சிறுவர் சிறுமியரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
போதியளவு உறங்கும் சிறுவர் சிறுமியரின் உடல் எடை குறைவாகக் காணப்படுவதுடன், உறக்கமற்ற சிறுவர் சிறுமியரின் எடை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு தடவையும் சிறுவர் சிறுமியரின் உடல் எடை, உயரம் மற்றும் உடற் கொழுப்பளவு ஆகியன அளவீடு செய்யப்பட்டுள்ளது.
போதியளவு உறக்கமற்ற சிறுவர் சிறுமியர் அதிக உடற் திணிவுடையவர்களாக காணப்படுகின்றனர்.
ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர் சிறுமியர் பொதுவாக 11 மணித்தியாலங்கள் உறங்குவதாக ஆய்வாளாகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வாறெனினும், 20 வீதமான சிறுவர் சிறுமியர் உறங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரியான முறையில் தூங்காத சிறுவர் சிறுமியர் உடல் எடை கூடுவது மட்டுமன்றி வேறும் சுகாதாரப் பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக மறதி, கவனம் சிதறல், சோர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Previous ஸ்ரீதேவி குறித்த வதந்திகளுக்கு முடிவு கட்ட தீர்மானம்
Next உணவுக் கட்டுப்பாடு உடற் பருமணை குறைக்குமா?

You might also like

மருத்துவம்

அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்ப இதுல ஒன்ன தினமும் செய்யுங்க…

ஒவ்வொரு வருடமும் ட்ரெண்ட் மாறிக் கொண்டே வருகிறது. சில வருடங்களுக்கு முன் மெல்லிய புருவங்கள் தான் ட்ரெண்ட்டாக இருந்தது. இதற்காக பெரும்பாலான பெண்கள் தங்களது புருவங்களை அழகாக வில் போன்று காட்டுவதற்கு த்ரெட்டிங் செய்தார்கள். ஆனால் தற்போது சற்று அடர்த்தியான புருவங்கள்

மருத்துவம்

பக்க விளைவு இல்லாத இயற்கை கருத்தடை மருந்துகள்

புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அநேகம் பேர் இன்று, இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார தன்னிறைவை அடைவதற்கு முன் குழந்தைகள் பிறப்பதை சற்று காலம் தள்ளிப் போடலாம் என்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவு

மருத்துவம்

ஆண்கள் மற்றும் பெண்கள் நிர்வாணமாக தூங்க வேண்டும் என்பது ஏன் …!? இதோ அதிர்ச்சி தகவல் ..!

எடை குறைக்க எல்லோருக்கும் ஆசை இருக்கும் அதே நேரம் ஆண்மை விருத்தி அடையவும் கொள்ளை ஆசை இருக்கும் அதற்கு நிறைய கஷ்ட பட வேண்டாம் இத மட்டும் செய்யுங்கள் . உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், பல வழிகளிள் கடினமாக உழைத்து தங்கள்