தொடரும் பொலீஸ் அராஜகம்..! மூன்று மாத கர்ப்பிணியின் வயிற்றில் காலால் உதைத்து கொலை…! 👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 406
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  714
  Shares

தமிழகத்தில் பொலிசார் விரட்டியபோது இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த உஷா என்றபெண்ணுடைய கணவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம்பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(40), தனியார்வங்கியில் பணியாற்றி வருகிறார், இவருடைய மனைவி உஷா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார்.
இந்நிலையில்ராஜா தனது மனைவி உஷாவுடன், திருச்சிமாவட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளார்.
துவாக்குடி சுங்கச்சாவடி அருகே ராஜாவின் வாகனம்சென்றபோது, அங்கு சோதனையில் இருந்த போக்குவரத்து காவலர் காமராஜ், ராஜாவின்வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், அதனை கவனிக்காமல் ராஜா சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காமராஜ், தனது ஜீப்பில் ராஜாவை விரட்டிச் சென்றுள்ளார். திருச்சி- தஞ்சை சாலையில் பெல்ரவுண்டானா அருகே காவலர் காமராஜ், அவர்களை வழி மறித்ததோடு, ராஜாவின்இருசக்கர வாகனத்தை ஆவேசமாக எட்டிஉதைத்துள்ளார்.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த கர்ப்பிணியானஉஷா, அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து, அப்பகுதியில் திரண்ட மக்கள் உஷாவையும், அவரது கணவர் ராஜாவையும் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தமிழகம்முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, காவலர் காமராஜூக்கு எதிராக கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில்மருத்துவமனையில் உஷாவின் உடலில் இருந்த நகைகளை, அவரது கணவர் ராஜாவிடம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ரத்த கறைபடிந்தசட்டையுடன் ராஜா, தனது மனைவிஎங்கே தனது குழந்தை எங்கே என்று கதறி அழுதுள்ளார், இந்த புகைப்படம் காண்போர் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 406
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  714
  Shares