இலங்கையில் பேஸ்புக்,வாட்சப், வைபர்,டுவிட்டர், பாவிப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை ..👇👇 அரசு அதிரடி .காரணம் இது தான்.👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 482
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  862
  Shares

சமூக வலைத்தளங்களுக்குள் மாற்று வழிகளின் ஊடாக பிரவேசிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இனவாத கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் நிழவும் நிலைமையைக் கருத்திற் கொண்டு இணையம் ஊடாகப் பயன்படுத்தப்படும் முகப்புத்தகம், வட்சப், வைபர், இமோ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிக்க நேற்று முன்தினம் புதன் கிழமை முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இத் தற்காலிக தடை இன்று வெள்ளிக்கிழமையும் அமுலில் இருக்கும் என தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் மாற்று வழிகளின் ஊடாக சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிக்க சிலர் முயற்சிப்பதாக பதிவாகியுள்ளது.
இதன் காரணமாகவே குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 482
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  862
  Shares