ரஜினி இயமலைக்கு பயணம்!

ரஜினி இயமலைக்கு பயணம்!

அரசியல் கட்சி துவக்க உள்ள நடிகர் ரஜினி, இன்று(மார்ச் 10) இமயமலைக்கு கிளம்பி சென்றார்.

தமிழகத்தில், ஆன்மிக அரசியலை உருவாக்குவேன் எனக்கூறிய ரஜினி, விரைவில் கட்சி பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக, பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ள ரஜினி, ‘எம்.ஜி.ஆர்., ஆட்சியை தருவேன்’ என, அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சினிமா, அரசியல் என, பம்பரமாக சுழன்ற ரஜினி, இன்று இமயமலைக்கு புறப்பட்டார். விமானம் வாயிலாக, சிம்லா செல்லும் ரஜினி, அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் மற்றும் பாபா குகைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். குகையில், தன் குரு பாபா மற்றும் ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறுகிறார். சமீபத்தில், தன் நண்பர்களுடன் இணைந்து, இமயமலையில் கட்டிய, தியான மண்டபத்திற்கும் செல்ல உள்ளார்.

அரசியல் இயக்கம் துவங்க முடிவெடுத்த பின்னர் இமயமலை பயணம் மேற்கொள்ள உள்ளேன். இமயமலைக்கு சென்று 8 ஆண்டுகள்ஆகிறது. புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. குறைந்த பட்சம் 10 நாள் முதல் 15 நாள் வரை தங்க திட்டமிட்டு உள்ளேன். தர்மசாலா, பாபா குகைக்கும் சென்று வழிபட உள்ளேன். இமயமலை சென்ற பின்னா்தான் எத்தனை நாள் அங்கு இருப்பேன் என முடிவு செய்யப்படும். காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை . இவ்வாறு அவர் கூறினார்.

Previous டில்லியில் பிரான்ஸ் அதிபருக்கு உற்சாக வரவேற்பு
Next ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம்

You might also like

சினிமா

ஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி2

பாகுபலி 2 படம் ஜப்பானில் சாதனை படைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பாகுபலி-2’ படம் ஜப்பானில் 100 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய திரை உலகில் சாதனை

சினிமா

டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு

டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் உச்ச நட்சத்திரம் அபிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பிலிமில் வெளியான படங்களில் இருந்த தரம் டிஜிட்டல் படங்களில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தற்கால

சினிமா

நயந்தாரா “அந்த மாதிரி ” சீனில் நடிக்க மட்டும் ஒரு கோடி ரூபாயாம் ! என்ன படத்தில் தெரியுமா.?

சிரஞ்சீவியின் 150 வது திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க பல முன்னணி கதநாயாகிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் இப்போது அந்த படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த படத்தில் நடிப்பதற்கு மூன்று