5 ரூபாய்க்காக சட்டக்கல்லூரி மாணவிக்கு ஆட்டோ ட்ரைவர் செய்த கொடூர செயல் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 569
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  889
  Shares

கேரள மாநிலம் ஆலுவா நகர் ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி நீது (வயது 37) சட்டக்கல்லூரி மாணவி. இவர் நேற்று காலை மொபட்டில் ஆலுவா நகருக்கு சென்றார்.
அங்குள்ள வாகன நிறுத்தும் இடத்தில் மொபட்டை நிறுத்தி விட்டு திருச்சூருக்கு பஸ்சில் சென்றார். அங்கு வேலை முடிந்து மாலை ஆலுவா நகருக்கு வந்தார்.
பஸ் நிலையத்தில் இருந்து மொபட்டு நிறுத்தியிருக்கும் இடத்திற்கு ஆட்டோவில் சென்றார். வாகன இடத்திற்கு வந்தபோது ஆட்டோ கட்டணம் ரூ.40 ஆனது. நீதுவிடம் சில்லரையாக ரூ.35 மட்டுமே இருந்தது. மற்றவை 500 ரூபாய் நோட்டாக இருந்தது.
தன்னிடம் ரூ.35 தான் இருக்கிறது என்று நீது டிரைவரிடம் கூறினார். ஆனால் தனக்கு ரூ.40 முழுமையாக வேண்டும் என்று ஆட்டோ டிரைவர் கண்டிப்புடன் கூறினார். இதனையடுத்து அவர் 500 ரூபாய் நோட்டை டிரைவரிடம் கொடுத்தார். அவரிடமும் சில்லரை இல்லை.
ஆட்டோவில் நீதுவை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கடைக்கு சென்று டிரைவர் சில்லரை மாற்றி வந்தார். சில்லரை மாற்றியவுடன் நீதுவிடம் ரூ.450 மட்டும் கொடுத்தார். மீது 10 ரூபாய் இல்லை என்று கூறினார். நான் 5 ரூபாய் இல்லை என்று கூறினேன். ஏற்க மறுத்து விட்டு தற்போது என்னிடம் இருந்து 10 ரூபாயை அபகரிக்க நினைக்கிறீர்களே இது நியாயமா? என்று கேட்டார்.
ஆட்டோ டிரைவருக்கும் நீதுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டிரைவர் மாணவியை அதே ஆட்டோவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச்சென்றார். பின்னர் நீதுவை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி தள்ளினார்.
ரோட்டில் குப்புற விழுந்த நீதுவை முகத்தில் கால் வைத்து தரையோடு தரையாக மிதித்து தேய்த்தார். இதில் நீதுவுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் விடாமல் இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து தூக்கி நிறுத்தி கன்னத்தில் அறைந்தார். இதில் நீதுவின் பற்கள் சிதறி தெறித்தன. அப்போதும் ஆத்திரம் தீராத ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை பலமுறை தாக்கினார். பெண் கீழே விழுந்ததும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு டிரைவர் தப்பினார்.
ஆட்டோ செல்லும்போது அதன் நம்பரை நீது குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் தட்டுத்தடுமாறி அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஆட்டோ நம்பருடன் புகார் செய்தார். இது குறித்து ஆலுவா போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டக்கல்லூரிமாணவியான நீதுவை தாக்கிய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 569
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  889
  Shares