தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும் என குயின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
ஒரு வகை தவளையின் தோலைப் பயன்படுத்தி 70 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
லண்டனில் நடைபெற்ற மெடிக்கல் பியுச்சர்ஸ் இனோவேசன் மருத்துவ விருது வழங்கும் விழாவில் குறித்த ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ் ஸோவ் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு, தவளைகளின் உடற்தோலைக் கொண்டு மருந்துகளை தயாரித்துள்ளது.
குருதிக் கலன்களின் வளர்ச்சிக்கு தவளைகளின் தோல்களில் காணப்படும் புரதப் பொருள் உதவியாக அமைகின்றது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குருதிக் கலன்களை வளர்ச்சியடையச் செய்யவும், புற்று நோய்க்கட்டிகளை அழிப்பதற்வதற்குமான மருந்துப் பொருட்களை வெக்ஸி மன்கீ ப்ரொக் (றயஒல அழமெநல கசழப) தவளைகளின் உடற் தோலைப் பயன்படுத்தி தயாரிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குருதிக் கலன்களின் ஊடாகவே அநேகமான புற்று நோய்க்கட்டிகள் உருவாவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குருதிக் கலன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் புற்று நோய்க்கட்டிகளை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
குருதிக் கலன்களுடன் தொடர்புடைய பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது இந்த தவளைத் தோல் மருந்துகளை பயன்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
காயங்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இருதய நோய், நீரிழிவு போன்ற நோய்களின் போது எதிர்காலத்தில் இருந்த மருந்துகளை பயன்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருத்துவக் கண்டுபிடிப்பை பொதுவான மருந்துப் பொருளாக அறிமுகப்படுத்துவதற்கு இன்னும் பல தடைகள் தாண்ட வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous தமிழ் படத்தில் நடிக்கப் போவதில்லை - பார்வதி
Next ஆயுள் முழுவதிலும் ஜனாதிபதியாக வாழப் போகும் ஷீ ஜின்பின்

You might also like

டீக்கடை டிப்ஸ்

மத்தி எனும் இந்த மீன் பிரியரா நீங்கள்..? அப்படியானால் இதை கட்டாயம் படியுங்கள்..!

பொதுவாகவே மீன் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக சிலர் இந்த மீனை விரும்பி சாப்பிடுவார்கள்..! தமிழகத்தில் அதிகளவு கிடைக்கும் மீன்களில் ஒன்றான மத்தி மீனில் ஏராளமான நன்மைகள் உள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும் மத்தி மீன், கேரள மாநிலத்திற்கு

டீக்கடை டிப்ஸ்

ஆபிரிக்காவின் அற்புதப் பூங்கா

உலக இயக்கத்திற்கு இயற்கையின் சமநிலைத் தன்மை மிகவும் இன்றியமையா ஏதுவாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி, நகரீக மேம்பாடு மற்றும் கால மாற்றத்தினால் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இடைவெளி சற்றே நீண்டு செல்கின்றது என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தமாகும். எனினும் உலகின் சில

டீக்கடை டிப்ஸ்

தலையின்றி 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த பறவை

தலையின்றி 18 மாதங்கள் வரையில் பறவையொன்று உயிர் வாழ்ந்த அதிசயம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோழி ஒன்று 18 மாதம் உயிருடன் இருந்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள