தமிழ் நாட்டில் மலையேறும் பயிற்சிக்காக சென்று பாரிய தீவிபத்தில் சிக்கிய மாணவ மாணவிகளின் பலியானோர் மற்றும் மீட்கப்பட்டோர் விபரம் …👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 490
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  870
  Shares

தமிழகத்தில் காட்டுப்பகுதியில்ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின்காரணமாக டிரக்கிங் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகளில் 8 பேர் உடல் கருகி பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்தஇரண்டு குழுவினர் நேற்றுமலையேறும் பயிற்சியில்ஈடுபட்டனர் .
அப்போது திடீரென ஏற்பட்டகாட்டுத்தீயில் கல்லூரி மாணவ-மாணவிகள் என மொத்தம் 39 பேர் சிக்கியுள்ளனர்.
காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்தவனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களைமீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் குழந்தைகள் என 39 பேர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கொழுக்குமலைப் பகுதியில் இருந்து அவர்கள் அனைவரும் மீண்டும் மலை அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரெனகாட்டுத் தீ ஏற்பட்டதில் இரு குழுவினரும்அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறிஓடியுள்ளதால் செய்வதறியாமல் தீயில் சிக்கியுள்ளனர்.
இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், 8 பேர் உடல் கருகி பலியாகியிருப்பதாகவும், அதில் 5 பெண்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவர்கள் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.
ஆனால் இந்த உயிரிழப்பு குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியிடவில்லை. மேலும் மீட்கப்பட்டவர்களில்17 பேரின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 490
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  870
  Shares