அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பணி நீக்கம்

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பணி நீக்கம்

அமெரிக்க ராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய ரெக்ஸ் ரில்லர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இந்த அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ராஜாங்கச் செயலாளராக சீ.ஐ.ஏவின் பணிப்பாளராக கடமையாற்றிய மைக் பாம்பியோவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ட்ராம்ப் பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் ரில்லர்சன் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ரில்லர்சனின் சேவைக்கு நன்றி பாராட்டுவதாகவும் புதிதாக நியமிக்கப்பட்டவர் சிறந்த முறையில் கடமைகளை முன்னெடுப்பார் எனவும் ட்ராம்ப் தெரிவித்துள்ளார்.
சில முக்கியமான விடயங்களில் கருத்து முரண்பாடு காணப்பட்டதாகவும் இதனால் பதவியிலிருந்து ரில்லர்ஸனை நீக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரில்லர்சனை தமக்கு மிகவும் பிடிக்கும் எனவும், சில கருத்து முரண்பாடுகளினால் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Previous ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிக்க வயதெல்லை அறிமுகம்!
Next பிரபல விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹோக்கிங் காலமானார்

You might also like

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 20-04-2018, சித்திரை 07, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.46 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 09.14 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

நிமிடச் செய்திகள்

மரணித்த தமிழ் பெண்ணையும் விடாத முஸ்லீம் இளைஞர்கள்..! அதிகரிக்கும் கொடுமைகள்…!

இது முஸ்லீம்களுக்கு எதிரான பதிவு கிடையாது ..ஒரு விழிப்புணர்வு பதிவு ..! திருகோணமலையில் நேற்று நடைபெற்ற கண்டன பேரணி குறித்து சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற வகையில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரினால் மிகவும் அருவருக்கத்தக்கதும் மிகவும் கீழ்த்தரமான

நிமிடச் செய்திகள்

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை – அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சு நடத்தாதவரையில், அமெரிக்கா அவர்களுடன் பேசாது என வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் தெளிவுபடுத்தி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் முடிவுக்கு வரவில்லை. அவ்வப்போது அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் மீதும், அமெரிக்க கூட்டுப்படையினர் மீதும்