ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிக்க வயதெல்லை அறிமுகம்!

ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிக்க வயதெல்லை அறிமுகம்!

பிரித்தானியாவில் ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பது குறித்த வயதெல்லை விதி அறிமுகம் செய்வது காலம் தாழ்த்தப்பட உள்ளது.
ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பவர் தனது வயதினை உறுதி செய்யும் வகையிலான பொறிமுறைமை ஒன்றை பிரித்தானியா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பிரித்தானியாவில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவிருந்தது.
எனினும், தற்பொழுது ஏப்ரல் மாதத்தில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியான விதியை உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும் எனவும் இதனால் இந்த நடைமுறை காலம் தாழ்த்தப்படுவதாகவும் டிஜிட்டல், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய திரைப்பட வகையீட்டுச் சபையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
எனினும், இவ்வாறு வயதெல்லை நிர்ணய அடிப்படையில் பயனர்கள் ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட போகின்றார்கள் என்பது பற்றிய பொறி முறைமை இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Previous ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து
Next அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பணி நீக்கம்

You might also like

டீக்கடை டிப்ஸ்

பழங்களை தோலுடன் சாப்பிடுபவரா நீங்கள்..!? அப்படியானால் கண்டிப்பாக இதை படியுங்கள்..!

பொதுவாக பழங்கள் சாப்பிட பிடிக்கும். எல்லா பழங்களுமே ஏதாவது ஒரு வகையில் பலன் உள்ளதும் பயனானதும் தான் . ஆனால் அந்த பழங்களை நாம் எப்படி உண்ணுகிறோம் என்ற முறையில் தான் அதன் பயன் முழுமையாக எமக்கு கிடைக்கும் அப்படி கிடைக்கும்

டீக்கடை டிப்ஸ்

உங்களது பேஸ்புக் கணக்கில் தகவல் களவாடப்பட்டுள்ளதா என்பது எவ்வாறு அறிந்து கொள்வது

உங்களது பேஸ்புக் கணக்கிலிருந்து தகவல்கள் காளவாடப்பட்டுள்ளதா என்பதனை அறிந்து கொள்வது எவ்வாறு என்பது பற்றி நாம் தெரிந்து கொள்வோம். பேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் ரகசியமாக மற்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரம் அம்பலமாகி இருக்கும் நிலையில், உங்களின் பேஸ்புக் டேட்டா திருடப்பட்டதை கண்டறிவது

டீக்கடை டிப்ஸ்

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவதனை தடுப்பது எப்படி?

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் இந்த தகவல்கள் களவாடப்படுவதனை தடுப்பது எவ்வாறு என்பது பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக் பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் வாடிக்கையாளர் அழைப்பு, காண்டாக்ட் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கப்படுவதை