ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து

ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்லவின் புதல்வரும், தேசிய கிரிக்கட் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரத அனுமதிப்பத்திரம் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரம்புக்வெல்ல இலங்கை தேசிய அணியின் சார்பில் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தியதாக ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரம்மித் ரம்புக்வெல்லவின் கார், மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதுண்டதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை ரம்மித் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டிலும் குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக ரம்மித் ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous சமூக ஊடகங்கள் மீதான தடை வெள்ளிக்கிழமை நீக்கம்?
Next ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிக்க வயதெல்லை அறிமுகம்!

You might also like

விளையாட்டு

சுதந்திரக் கிண்ணத்தை இந்தியா வெல்லும் – ஜயவர்தன

இலங்கையில் இன்றைய தினம் நடைபெறவுள்ளற சுதந்திர கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றியீட்டும் என இலங்கையின் முன்னாள் தலைவர் மஹல ஜயவர்தன தெரிவித்துள்ளார். வங்காள தேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என ஜெயவர்தனே

விளையாட்டு

உலக கிண்ண தகுதிகாண் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி

உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஹெட்மையரின் அதிரடி சதங்களால் மேற்கிந்திய தீவுகள் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது. ஐசிசி உலகக்கிண்ண குவாலிபையர் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று ஐக்கிய அரபு

விளையாட்டு

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்

மெல்போர்ன்: உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அசத்திய இந்திய வீராங்கனை அருணா ரெட்டி, வெண்கலம் வென்று வரலாறு படைத்தார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான ‘வால்ட்’ பிரிவில் இந்தியாவின் அருணா ரெட்டி பங்கேற்றார். பைனலில் துடிப்பாக