இலங்கையில் பேஸ்புக் தடையை நீக்க இலங்கை அரசு நிபந்தனை விதிப்பு: பேஸ்புக் நிறுவனம் சாதகமான பதில்!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 23.6K
 •  
 •  
 •  
 • 234
 •  
 •  
 •  
 •  
 •  
  23.8K
  Shares

இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில், பேஸ்புக் நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.பேஸ்புக் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்களை நீக்க இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கையின் அரசாங்கத்துடனும், அரச சார்பற்ற அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இனமுறுகலை ஏற்படுத்தும் பதிவுகள் தொடர்பில் தாங்கள் இறுக்கமான கொள்கையை பின்பற்றுவதாகவும், அவ்வாறான பதிவுகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே வேளை, பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. பேஸ்புக் மீதான தடை அரசியல் சார்ந்த விடயம் இல்லை.

ஆனாலும், இனவாதத்தை தூண்டும் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையான பதிவுகளை தொடர்ந்து இடம்பெற அனுமதிக்க முடியாது.இந்தவிடயத்தில் பேஸ்புக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

அந்த நிறுவனம் வழங்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த தடையை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 23.6K
 •  
 •  
 •  
 • 234
 •  
 •  
 •  
 •  
 •  
  23.8K
  Shares