யாழில் தமிழ், முஸ்லீம் இளைஞர்கள் மோதல். ..👇 👇 பாதுகாப்பு பணியில் பொலீஸ்.👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 397
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  717
  Shares

யாழ்.பொம்மைவெளி பகுதியில் உள்ள பள்ளிவாசல் முன்பாக நேற்றிரவு முஸ்லீம் – தமிழ் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பள்ளி வாசல் முன்பாக வர்த்தக நிலையம் ஒன்றினை நடாத்தி வரும் தமிழ் இளைஞர் ஒருவர் தனது முச்சக்கர வண்டியினை பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தி வந்துள்ளார்.
அந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற முஸ்லீம் இளைஞர்கள் இனி பள்ளிவாசலுக்கு அருகில் முச்சக்கர வண்டியை நிறுத்த கூடாது என எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
அவ்வேளை அங்கு நின்ற ஏனையவர்கள் இரு தரப்பினர்களுக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பின்னர் இரவு வேளை கடையில் நின்றிருந்த தமிழ் இளைஞர்களுக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து அது தொடர்பில் யாழ்.காவல் நிலையத்திற்கு முறையிட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததுடன் , அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 397
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  717
  Shares