அமிதாப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

அமிதாப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

பிரபல இந்தி நடிகர் அபிதாப் பச்சானின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் அமிதாப்பச்சன், நேற்று காலை, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ இந்திப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார். போர்க்கள காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த அவர், தனது வலது தோள்பட்டை கடுமையாக வலிப்பதாக கூறினார். உடனடியாக, அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவருடைய தனி டாக்டர்கள் 3 பேர், மும்பையில் இருந்து விசேஷ விமானத்தில் ஜெய்ப்பூருக்கு விரைந்தனர். அவர்கள் அமிதாப் பச்சனுக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, தோள்பட்டை வலியில் இருந்து அமிதாப்பச்சன் விடுபட்டார்.

அவரது உடல்நிலை, மருத்துவ ரீதியாக தகுதியாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர். உடல்நிலை முன்னேறி வந்தாலும், அமிதாப் பச்சன் முறையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

Previous கேரளாவில் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 400 பேர் காணவில்லை
Next தெரிந்தவர்களிடமிருந்தே அதிகளவு பாலியல் தொல்லை – சின்மயி

About author

You might also like

சினிமா

ஸ்ரீதிவ்யாவிற்கு டும் டும் டும். மாப்பிள்ளை இவர் தானாம்..!

ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவிற்குள் நுழைந்ததும் எல்லோரும் நினைத்தது ஒரு வலம் வருவார் என்று ஆனால் சில படங்களுடனேயே சுருண்டு விட்டார் . நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின்

சினிமா

கடுமையான சண்டைக் காட்சிகளுடன் உருவாகி வரும் நயன்தாராவின் அடுத்த படம்

நயன்தரா தெலுங்கில் நடித்து வரும் படம் “சயீரா நரசிம்ம ரெட்டி’ கடுமையான சண்டைக் காட்சிகளுடன் உருவாகி வருகின்றது. தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பயங்கர சண்டைக் காட்சிகளுடன் உருவாகி இருப்பதாக படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி

சினிமா

ஜான்வியின் ஜீன்ஸ காணோம்” ஸ்ரீதேவி மகளின் கவர்ச்சி புகைப்படத்தால் சர்ச்சை..! புகைப்படம் இணைப்பு..!

ஸ்ரீதேவி மரணத்தின் பின் அனைவரது பார்வையும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மேல் திரும்பியுள்ளது . நடிகை ஸ்ரீதேவியின் மகள் எது செய்தாலும் சென்சேஷன் ஆகி விடுகிறது. அவர் ஜிம் போவதில் இருந்து அப்பாவுடன் வெளியில் டின்னர் செல்வது வரை அவரது புகைப்படங்கள்