ஐக்கிய நாடுகள் சபையில் காணமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழருக்காக குரல் …👇👇 யார் தெரியுமா..👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 561
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  861
  Shares

ஜெனிவாவில் நடைபெற்ற ஊர்வலம் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் மழை மற்றும் குளிரை பொருட்படுத்தாது கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான தமிழீழ மக்கள் தமது கோரிக்கைகளை ஐ.நா மனித உரிமை சபையிடம் முன்வைத்தனர்.
இங்கு, பல மக்கள் கூட்டங்கள் இலங்கை பற்றிய விடயங்களை அடிப்படையாககொண்டு ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
இக்கூட்டங்களில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து அரசியல்வாதிகள், சமயத்தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ளும் அதேவேளை, வேறுபட்ட நாடுகளிலிருந்து புலம்பெயர் தமிழர்களும் கலந்து கொள்கின்றனர்.
குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதிகள், பேராசிரியர் போல் நியூமன் தலைமையில் வருகை தந்துள்ளார்கள்.
நேற்று செவ்வாய்கிழமை பாகிஸ்தானில் பலூச் மக்கள் காணாமல் போவது பற்றிய கூட்டத்தில், தமிழீழ மக்கள் காணாமல் போவது பற்றி பிரான்ஸ் தமிழர் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி கிருபாகரன் உரையாற்றினார்.
கிருபாகரன் உரையாற்றுகையில், உலகில் இலங்கை ஓர் சிறிய தீவாக காணப்பட்ட போதிலும். ஐ.நா விபரங்களுக்கு அமைய இலங்கை உலகில் காணாமல் போயுள்ளோர் விடயத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
இலங்கை தீவிலிருந்து காணாமல் போனோரின் உறவினர்கள், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் மனித உரிமை சபைக்கு வருகை தந்துள்ளமை வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
நேற்று மாலை ஜெனிவாவில், சர்வதேச மனித உரிமை அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலிலும் பிரான்ஸ் தமிழர் உரிமை மையத்தின் பிரதிநிதிகள் இவர்களது மிக நீண்டகால ஐ.நா செயற்பாட்டின் அடிப்படையில் அழைக்கப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 15 மற்றும் 16ம் திகதிகளில் சில முக்கிய புள்ளிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலங்கை பற்றி கூட்டங்கள் தமிழ் நாட்டினை தளமாக கொண்டு இயங்கும் பசுமை தாயகத்தின் ஆதரவுடன் நடைபெறவுள்ளன.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 561
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  861
  Shares