பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது

பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது

பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது என ஆய்வுகள் மூலம் தெரியந்துள்ளது.
பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்தும் போது அதில் காப்படும் ரசாயன துகள்கள் கலந்து விடுவதாகவும் இதனால் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னணி ஆய்வு நிறுவனமொன்று இந்த ஆய்வினை நடத்தியுள்ளது.

பிளாஸ்டிக் பெட்பாட்டில், பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பயன்படுத்துவது இப்போது அதிகரித்துள்ளது. பெரும்பாலான நகரங்களில் இந்த வகை குடிநீரைத்தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் இதே நிலை உருவாகி விட்டது. பெரும்பாலான மக்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களையே தங்களுடன் எடுத்துச்சென்று தேவையான நேரங்களில் பயன்படுத்துகிறார்கள். இந்த கலாச்சாரம் இப்போது நாகரீகமாகவும் மாறிவிட்டது.

ஆனால், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று இப்போது வெளிவந்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுசம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ஆர்ப்மீடியா என்ற பத்திரிகையாளர் அமைப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு செய்துள்ளது. நியூயார்க் பல்கலைக்கழக மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வு பேராசிரியர் ஷெர்ரிமேசன் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி நிறுவனங்களின் 250 குடிநீர் பாட்டில்களை ஆய்வுக்கு எடுத்து அவற்றை பரிசோதித்துள்ளனர். அதில் இந்தியாவில் இருந்து பிஸ்லரி குடிநீர் பாட்டிலும் சோதனைக்கு எடுக்கப்பட்டது.

இந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை 1.5 மைக்ரான் அதாவது 0.0015 மில்லி மீட்டர் அளவு துவாரம் கொண்ட வடிகட்டி மூலம் வடித்தெடுத்து பின்னர் அந்த வடிகட்டியில் தேங்கியுள்ள பொருட்களை ஆய்வு செய்தார்கள். மைக்ராஸ்கோப் மற்றும் இன்ப்ரா ரெட் பரிசோதனை மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் ரசாயன துகள்கள் இருந்து தெரியவந்தது.

அதாவது பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்) துகள்கள் அந்த வடிகட்டியில் தேங்கி இருந்தன. அதாவது தண்ணீருக்குள் இந்த துகள்கள் கலந்து இருந்தன.

Previous FB மீதான தடை நீக்கம்
Next பாலியல் தொல்லைகளை இவ்வாறு தடுக்கலாம் - இலியானா

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

இறந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி சீன தம்பதியினர்…

நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த சீன தம்பதியினர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். சீனாவில் விபத்தில் இறந்து போன தம்பதியினரின் கருமுட்டை மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த தம்பதியினர் 2013-ம் ஆண்டு கார் விபத்தில்

டீக்கடை டிப்ஸ்

பற்பசை ( toothpaste) பாவிப்போருக்கான எச்சரிக்கை..! அதிகம் பகிருங்கள் உங்களுக்கும் இந்த நோய் பரவலாம்…!

இன்றைய உற்பத்திப் பொருட்களில் பெரும் அளவில் விஷத்தன்மை கொண்டவை தான். எதை எடுத்தாலும் அதிலும் நச்சுத்தன்மை இருக்கத் தான் செய்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையிலும் கலக்கப்பட்டு இருக்கும் இரசாயனம் கொடிய நோயை ஏற்படுத்துகின்றதாம் . குழந்தைகள் முதல்

டீக்கடை டிப்ஸ்

பெண்களின் கன்னித்தன்மை (vergin) பற்றி அதிர்ச்சி தகவல்..! அதிகம் பகிருங்கள்..!

பெண்களை இன்றும் உயிருடன் கொண்டு புதைக்கும் ஒரு விடயம் என்ன என்றால் “கன்னித்தன்மை” பரிசீலனை தான். சில இடங்களில் திருமணம் முடிந்த நாள் இரவில் வெள்ளை துணி ஒன்றை கட்டிலில் விரித்து வைத்து விடுவார்கள் காலை எழுந்ததும் வெக்கம் இன்றி அதை