மது போதையில் வாகனம் செலுத்தினாரா பிரபல தயாரிப்பாளர்?

மது போதையில் வாகனம் செலுத்தினாரா பிரபல தயாரிப்பாளர்?

மது போதையில் வாகனம் செலுத்தியதாக பிரபல தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னையில் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் நள்ளிரவில் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின் போது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் பலர் சிக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் கதீட்ரல் சாலையில் போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை போட்டனர்.

அதில் சினிமா தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் இருந்தார். அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பி.எல்.தேனப்பன் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச் சென்று, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போலீசில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

Previous மூத்த நடிகை சாவித்திரியின் வேடம் ஏற்கிறார் கீர்த்தி சுரேஸ்
Next இந்திய பாராளுமன்றம் தொடர்ந்து பத்தாம் நாளாகவும் முடக்கம்

About author

You might also like

சினிமா

காலா எப்போது வெளிவரும்?

ரஜினி ரசிகர்களினால் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் காலா திரைப்பட வெளியீடு தொடர்ந்தும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றமை, ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ திரைப்படம், தற்போது நடைபெற்று வரும் ஸ்டிரைக்கால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும்

சினிமா

சூர்யா ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்! மகிழ்ச்சியா கொண்டாடுங்க

நடிகர் சூர்யா அவருக்கென ஒரு தனி பாணியை வைத்துள்ளார். அவருக்கு எப்படியான கெட்டப்பும் பொருந்தி விடும். எத்தனை நடிகர்கள் போலிஸாக நடித்தாலும் சூர்யா நடித்தது போல வருமா என சொல்லலாம். சூர்யாவுக்கு அப்போதே அப்படி ஒரு பெருமையை தந்தது அவரின் காக்க

சினிமா

கமல், ரஜினியை பின்னால் தள்ளிய தமிழக நடிகை

தென்னிந்திய நடிகைகளில் முதலாம் இடத்தை இந்த நடிகைப் பெற்றுக்கொண்டுள்ளார். டுவிட்டரில் அதிகளவான பின்தொடர்பவர்களைக் கொண்ட நடிககையாக தென்னிந்தியாவிலேயே சாதனை படைத்துள்ள இந்த தமிழக நடிகையை உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்