மூத்த நடிகை சாவித்திரியின் வேடம் ஏற்கிறார் கீர்த்தி சுரேஸ்

மூத்த நடிகை சாவித்திரியின் வேடம் ஏற்கிறார் கீர்த்தி சுரேஸ்

பழம் பெரும் நடிகையான சாவித்திரியின் வேடத்தை ஏற்று நடிகை கீர்த்தி சுரேஸ் படமொன்றில் நடிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில் வறுமையில் இறந்தார். அவரது வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் சினிமா படமாகிறது.

சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சாவித்திரி வாழ்க்கையை படமாக்குவதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா இரு வாரங்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

Previous ராமர் பாலத்தை அகற்ற முடியாது – மத்திய அரசாங்கம்
Next மது போதையில் வாகனம் செலுத்தினாரா பிரபல தயாரிப்பாளர்?

About author

You might also like

சினிமா

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீதேவியாக வித்தியாபாலன்

அண்மையில் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவரவுள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவியாக பிரபல நடிகை வித்தியாபாலன் நடிக்க உள்ளார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில்

சினிமா

வெளிநாட்டிற்கு சென்று தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைபடத்தால் ஷாக்கில் ரசிகர்கள்..!

தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். டிடி என்று செல்லமாக ரசிகர்கள் அழைப்பதும் அதற்காக தான் . டிடி எதை செய்தாலும் ட்ரண்டாகும். ஆனால் டிடியின் இந்த புகைப்படம் ஷாக் ஆககூடியதே தான். சும்மாவே டிடி எந்த நிகழ்ச்சி

சினிமா

கஷ்டத்தில் கமலஹாசனா…? நடிகை ஸ்ரீபிரியாவின் அதிரடி பேட்டி..!

நடிகர் கமலஹாசன் பற்றி புதிய விடயங்கள் பரவிக்கொண்டிருப்பது வழமை தான் . நடிப்பு அரசியல் என்று எப்போதும் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனால் கமல்ஹாசன் பணம் இன்றி இருப்பதால் தான்