ரஸ்யாவில் விமானம் மூலம் தங்க மழை

ரஸ்யாவில் விமானம் மூலம் தங்க மழை

ரஸ்hயவில் சரக்கு விமானமொன்றில் தங்கம் மற்றும் வைரங்கள் மழையாக பொழிந்தமை பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2400 கோடி) மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியற்றை எடுத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் அதன் சரக்கு பெட்டக கதவில் கோளாறு ஏற்பட்டு திறந்துள்ளது. இதனால் அதிலிருந்த தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று கீழே பொழிந்துள்ளது. உடனே விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். விமானம் பழுதானது தெரியாமல் சரக்குகளை ஏற்ற அனுமதித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தொழில்நுட்ப அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்க கட்டிகள் மழை போல் பொழிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous அரசியலில் எனக்கும் ரஜினிக்கும் முரண்பாடு – கமல்
Next அவசரகாலச் சட்டம் நீக்கம

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிக்க வயதெல்லை அறிமுகம்!

பிரித்தானியாவில் ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பது குறித்த வயதெல்லை விதி அறிமுகம் செய்வது காலம் தாழ்த்தப்பட உள்ளது. ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பவர் தனது வயதினை உறுதி செய்யும் வகையிலான பொறிமுறைமை ஒன்றை பிரித்தானியா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல்

டீக்கடை டிப்ஸ்

ஆண்கள் அந்த விடயத்தில் தயிர் சாதமா…!? சமத்தா என்று பெண்கள் கணிப்பிடுவது இப்படி தானாம்…! ஆண்களே உஷார்..!

ஆண்கள் வித விதமானவர்கள் ..அப்பிடி இல்லை என்றாலும் பெண்கள் வித விதமா கற்பனை பண்ணிக்கொள்வார்கள் ..நடை உடை பாவனைகளை வைத்தே கணிப்பிட்டு விடுவார்கள்…. அப்பிடி கணிப்பீட்டின் அடிப்படையில் இதோ பெரும்பாலும் ஆண்கள் எப்படி பெண்களை கணக்கிடுகிறார்கள் என்று தான் நீங்கள் அறிந்திருப்பீர்கள்,

டீக்கடை டிப்ஸ்

132 ஆண்டுகள் பழமையான போத்தலில் அடைக்கப்பட்ட செய்தி

சுமார் 132 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் வீசி எறிந்து, போத்தலில் அனுப்பி வைக்கப்பட்ட செய்தி தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. மேற்கு அவுஸ்திரேலிய கரையோரப் பகுதியில் இந்த போத்தல் மீட்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பின்தங்கிய கரையோரப் பகுதியில் டோன்யா இல்மான் என்ற பெண் இந்த