காஷ்மீரில் பாக் படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி

காஷ்மீரில் பாக் படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி

காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள மன்கோட் கிராம பகுதியில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை துப்பாக்கி மற்றும் சிறியரக மோட்டார் குண்டுகளால் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில், மூன்று குழந்தைகள் அடக்கம் எனவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அனைத்து எல்லையோர கிராமங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பூஞ்ச் பகுதியிலும் தாக்குதல் நடந்து வருவதாகவும்
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க கூடுதல் படைகள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous ஜெனிபர் லோபஸ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்
Next இரத்ததத்தின் சிவப்பு நிறத்திற்கான காரணம் ?

About author

You might also like

நிமிடச் செய்திகள்

பயனர்களின் தகவல்களை பாதுகாக்க விசேட தி;ட்டம் – பேஸ்புக்

பயனர்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டங்களை வகுத்துள்ளதாக பேஸ்புக்’ நிறுவனம், தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் பேஸ்புக் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக நாடுகளில் சமூக வலைத்தள பயன்பாட்டில் முக்கிய இடம் பிடித்து இருப்பது ‘பேஸ்புக்’. ஆனால் இதன்

நிமிடச் செய்திகள்

சூடானார் – நடிகை கஸ்தூரி

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இருந்து வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 தருவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது, ‘ஓட்டுக்கு ஐயாயிரம்

நிமிடச் செய்திகள்

இனி அரிசி இல்லை

அரிசி இறக்குமதி இடை நிறுத்தம்..!!! உள் நாட்டு விவசாயிகளின் நலன் கருதி அரிசி இறக்குமதியை இடைநிறுத்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்