நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அடக்கம்

நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அடக்கம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் முள்ளவாய்க்கால் முற்றத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளளது.
தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. அருளானந்தம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் சிறையில் இருந்து புறப்பட்ட சசிகலா சாலை மார்க்கமாக தஞ்சை சென்று அங்கிருந்து விளார் கிராமம் வந்தடைந்தார். டி.டி.வி தினகரன், புகழேந்தி ஆகியோரும் தஞ்சாவூர் வந்தடைந்தனர்.
இந்நிலையில், நடராஜன் உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என சசிகலாவின் சகோதர் திவாகரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மறைந்த நடராஜனுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருpகன்றனர்.
முள்ளிவாய்க்கால் முற்றம் அமைப்பதற்கு நடராஜன் தனது சொந்தக் காணியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கும் அந்தப் பிரபல ஹீரோ
Next இளையராஜாவிற்கு தமிழில் வாழ்த்து வெளியிட்ட ஜனாதிபதி

You might also like

நிமிடச் செய்திகள்

இசை ராஜாவிற்கு மகுடம் சூடி மகிழும் இந்திய அரசாங்கம்

இந்திய மத்திய அரசாங்கம், இசை ஞானி, இசை ராஜா இளையராஜவிற்கு மகுடம் சூடி மகிழ்ந்துள்ளது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி கோவிந்த் வழங்கியுள்ளார்.மத்திய அரசு ஒவ்வொரு

நிமிடச் செய்திகள்

ஜெர்மனி இஸ்லாமியர்களுக்கான நாடு கிடையாது – ஹொர்ஸ்ட் சீஹொபர்

ஜெர்மனி இஸ்லாமியர்களுக்கான நாடு கிடையாது என புதிய உள்துறை அமைச்சர் ஹொர்ஸ்ட் சிஹொபர் தெரிவித்துள்ளார். ஜெர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின் புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகளுக்கு, கடந்த காலங்களிலும் சிஹொபர் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உள்துறை அமைச்சராக

நிமிடச் செய்திகள்

தினகரன் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றியீட்டிய டி.வி.டி தினகரன் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் ஒர் அமைப்பினை தினகரன் ஆரம்பித்துள்ளார். மதுரையின் வேலூரில் நடைபெற்ற நிகழ்வின் போது கட்சியின் கொடியும் அறிமுனம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக