முகநூல் நிறுவனத்தை கடுமையாக எச்சரிக்கும் இந்தியா

முகநூல் நிறுவனத்தை கடுமையாக எச்சரிக்கும் இந்தியா

முகநூல் நிறுவனத்திற்கு இந்தியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் பேஸ்புக் நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. சுமார் 5 கோடி பயணர்களின் தகவல்கள் ஒரு செயலி மூலம் திருடப்பட்டு அது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க், 26-ந் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவி ஷங்கர் பிரசாத், “அனைவரின் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதையும் இந்திய அரசு மதிக்கிறது. ஆனால், தேர்தல்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூக்கை நுழைக்க நினைத்தால் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். மேலும், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

Previous நடிகர் திலகமாக திரையில் தோன்ற பாக்கியம் கிடைத்த பிரபலம்
Next கண் கட்டிக்கு உடன் நிவாரணம்

You might also like

டீக்கடை டிப்ஸ்

கொடூர குற்றவாளிகளின் பதுங்கு குகைகள் மற்றும் கொலைக்களங்கள்

சர்வதேசத்தை உலுக்கிய மாபெரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாப்பாக பதுங்கியிருந்த மறைவிடங்கள் மற்றும் குற்றச் செயல்கள் இடம்பெற்ற இடங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. பாதுகாப்பு இரகசியத்தன்மையையும் முதன்மையாகக் கொண்டு இத்தகைய உலகக் குற்றவாளிகள் சிலர் பதுங்கியிருக்கத் தெரிவு செய்த

டீக்கடை டிப்ஸ்

ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிக்க வயதெல்லை அறிமுகம்!

பிரித்தானியாவில் ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பது குறித்த வயதெல்லை விதி அறிமுகம் செய்வது காலம் தாழ்த்தப்பட உள்ளது. ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பவர் தனது வயதினை உறுதி செய்யும் வகையிலான பொறிமுறைமை ஒன்றை பிரித்தானியா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல்

டீக்கடை டிப்ஸ்

வெட்டிய அப்பிள் நிறம் மாறி விடுகிறதா இதோ எளிய வழி

வெட்டி வைத்த அப்பிள் நிறம் மாறி விடுகின்றதா இதோ எளிய வழியில் அதனை தவிர்க்க முடியும். பொதுவாக வெட்டி வைத்த அப்பிள் சொற்ப நேரத்தில் கபில நிறமாக மாற்றமடைந்துவிடும், இதனை தவிர்ப்பதற்கு வெட்டிய அப்பிளை இளநீரில் போட்டு வைப்பது அல்லது தேசிக்காய்