வெனிசுலாவின் க்ரைப்டோ நாணயத்திற்கு அமெரிக்கா தடை

வெனிசுலாவின் க்ரைப்டோ நாணயத்திற்கு அமெரிக்கா தடை

செனிசுவலாவின் க்ரைப்டோ டிஜிட்டல் நாணயத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தடை விதித்துள்ளார்.
க்ரைப்டோ நாணயத் தாள்களை அமெரிக்கப் பிரஜைகளோ நிறுவனங்களோ பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள தடைகளை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் வெனிசுலா இந்த நாணயத்தை அறிமுகம் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நாணயத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி முதல் வெனிசுலா அரசாங்கம் க்ரைப்டோ என்னும் டிஜிட்டல் நாணயத்தினை அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமெரிக்கா காலணித்துவ கொள்கையின் அடிப்படையில் இவ்வாறு தடைகளை விதிக்க முயற்சிப்பதாக வெனிசுலா குற்றம் சுமத்தியுள்ளது.

Previous புலிகளின் தங்கத்தை மீட்கும் பணி இடைநிறுத்தம்
Next மூளையை வலுவாக்கும் புதிய வகைப் புரதப்பொருள்

You might also like

நிமிடச் செய்திகள்

” ஆறுமுகத்தின் நாக்கில் என்ன சுளுக்கா…?” – கேட்கிறார் நாடாளூமன்ற உருப்பினர் எம் திலகராஜ்

” ஆறுமுகத்தின் நாக்கில் என்ன சுளுக்கா…?” கனகராஜூடன் விவாதிக்க அமைச்சரின் உதவியாளரான கமலதாசன் சுப்பையா போதும் – திலகர் பதில்!!! மூக்கை உடைப்பேன் என்றவருக்கு நாக்கில் என்ன சுளுக்காமா? சவாலை சரியாக ஏற்க வேண்டும் அ’தில்’தான் தில் இருக்கிறது என்கிறார் திலகர்

நிமிடச் செய்திகள்

சர்வதேச மகளிர் தினத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட பெண்கள்

ஸ்பெய்னில், சர்வதேச மகளிர் தினமான இன்று பெண்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்தி இந்தப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பெண்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பல ரயில்சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பணிப் புறக்கணிப்பு காரணமாக சுமார் 300 ரயில்கள் சேவையில்

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 29-04-2018, சித்திரை 16, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தசி திதி காலை 06.37 வரை வளர்பிறை பின்பு பௌர்ணமி. சித்திரை நட்சத்திரம் பகல் 02.06 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.