புதிய முகம் 2 விரைவில்….

புதிய முகம் 2 திரைப்படத்தின் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளது.
சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் சுரேஷ் மேனன், புதிய முகம் 2ம் பாகத்தை இயக்க ரெடியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ் மேனன், சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பவர். இருபது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களின் மூலம் மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார்.
இது குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது, “சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு. நான் நடிக்காமல் இருந்த காலகட்டங்களில் பல படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள், ஆனால் என்னை எதுவும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னர் எனக்கு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடிக்க நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. அதில் நடித்ததற்கு நேர்மறை விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்தன. தற்போது வரும் இளம் இயக்குனர்கள் சிறப்பான, துணிச்சலான கதாபாத்திரங்களை எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ் சினிமா துணிச்சலான கதைகள் வரும் ஒரு சிறப்பான கட்டத்தில் இயங்கி வருகிறது. எதிர்காலத்தில் இது போல சிறப்பான, அர்த்தமுள்ள அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் இயக்குவதற்காக புதிய முகம் படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வைத்திருக்கிறேன். அதற்காக நான் அவசரப்படவில்லை. சென்னை காவல்துறைக்காக போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் என்னுடைய பயனுள்ள நேரத்தை செல்வழித்து வருகிறேன். கழிவறைகள் வடிவமைப்பது கட்டுவது என சமூக செயல்பாடுகளிலும் பங்கு ஈடுபட்டு வருகிறேன். சமூக வாழ்க்கையின் அனுபவங்கள் எனக்குள் இருக்கும் இயக்குனருக்கும், நடிகருக்கும் சிறப்பான விஷயங்களை கொடுத்து வருகிறது” என் குறிப்பிட்டுள்ளார்.

Previous கண் கட்டிக்கு உடன் நிவாரணம்
Next பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்பட்ட நடிகர்?

About author

You might also like

சினிமா

அப்பாவுக்கு சவால் விடுமளவு வளர்ந்த ஸ்ரீகாந்த் மகன்..! ஷாக் ஆன ரசிகர்கள் ..! என்ன அழகு டா இது ..!

நாம இவர் இன்னும் திருமணம் ஆகி இருக்க வாய்ப்பு இல்லை என்று நினைப்பவர்கள் திருமணம் செய்து இருப்பார்கள் . புதிதாக திருமணம் ஆனது போல் இருக்கும் ஆனால் குழந்தைகள் அவர்கள் உயரத்தில் இருப்பார்கள் . இது சினிமா நடிகர்களின் வாழ்க்கைக்கு பக்காவாக

சினிமா

முரட்டுத் தனம் – இருட்டு அறையில் முரட்டு குத்து..! இப்படியா ஷாக் ஆன திரையுலகம் ..!

கௌதம் கார்த்திக் நடிப்பில் அண்மையில் வெளியாகி மாஸ் வசூல் செய்துவரும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. படத்திற்கான விமர்சனம் எல்லாம் கலவையாக தான் வந்துள்ளது, ஆனால் ரசிகர்களோ படத்திற்கு ஏகபோக வரவேற்பு கொடுக்கின்றனர். அதன்படி இப்படம் மூன்றே நாட்களில் சென்னையில்

சினிமா

காளி படத்திற்கான தடை நீக்கம்

இசைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காளி’ படத்திற்கு வித்திக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் “காளி”.