ரஜினியின் புதிய கட்சி எப்போது தொடங்கப்பட உள்ளது தெரியுமா?

ரஜினியின் புதிய கட்சி எப்போது தொடங்கப்பட உள்ளது தெரியுமா?

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் புதிய கட்சி எப்போது தொடங்கப்பட உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எதிர்வரும் மே மாதம் ரஜினியின் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டில் புதிய கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மே மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக புதிய நிர்வாகிகளை நியமிக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். ஆன்மீக பயணத்தின் போது அரசியல் தொடர்பான கேள்விகளை தவிர்த்ததுடன் நான் இன்னும் முழுநேர அரசியல் வாதியாகவில்லை என்று கூறினார்.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் சமூக வலைதளங்களிலும் அனலாய் கொதித்தது. இந்த நிலையில் சென்னை திரும்பியதும் போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் வைத்து பேட்டி அளித்த ரஜினி, காவிரி பிரச்சினை, ராம ரத யாத்திரை உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தமிழ் புத்தாண்டில் புதிய கட்சியை தொடங்கப்போவதாக தொடர்ந்து வெளியாகி வந்த தகவல்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
அன்றைய தினம் புதிய கட்சியை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார். இதனால் தமிழ்புத்தாண்டில் புதிய கட்சியை ரஜினி தொடங்குவார் என்று காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து மே மாதம் ரஜினி புதிய கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை அவர் முடுக்கி விட்டுள்ளார். புதிய கட்சியின் தொடக்க விழா சென்னை அல்லது கோவையில் நடைபெறும் என்று தெரிகிறது. புதிய கட்சியை தொடங்கும் முன்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமிக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் புதிய கட்சிக்காக ரஜினி அடித்தளம் போட்டு வருகிறார்.

Previous உலகில் மிகவும் அதிக சத்து உடைய பழம் எது தெரியுமா?
Next அழகுக் கலை நிலையம் செல்லாது பேஷியல் செய்ய முடியும்

You might also like

நிமிடச் செய்திகள்

ரஸ்யாவில் இடம்பெற்ற தீ விபத்தில் பலர் பலி

ரஸ்யாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவெமான்றில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரையில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 41 சிறுவர் சிறுமியர் உள்ளடங்களாக 64 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சைபிரிய நிலக்கரி அகழ்வு நகரமான கெமிரோவில்

நிமிடச் செய்திகள்

ஆயுள் முழுவதிலும் ஜனாதிபதியாக வாழப் போகும் ஷீ ஜின்பின்

சீனா ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசியலமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அரசு உடன்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது சீனாவின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஷீ ஜின்பின் இற்கு தான் உயிர்வாழும் காலம் வரையில் ஜனாதிபதியாக இருக்க முடியும்

நிமிடச் செய்திகள்

உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் நடவடிக்கை

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாரதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்ய உள்ளதாக, விசேட அறிக்கை ஒன்றின்