இறைச்சியை இவ்வாறு சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்து

இறைச்சியை இவ்வாறு சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்து

இறைச்சியை கிரில் செய்தோ அல்லது வறுத்தோ சாப்பிடுவதனால் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கிரில்டு மற்றும் வறுத்த இறைச்சியை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் எற்படும் என்ற எச்சரிக்கை தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை
மக்கள் மத்தியில் கிரில்டு மற்றும் வறுக்கும் இறைச்சி, சிக்கன் மற்றும் மீன் வகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒருவித வித்தியாசமான சுவையில் இருப்பதால் அவற்றை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஆனால் அவற்றை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் எற்படும் என்ற எச்சரிக்கை தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு டி.எச்.சான் பொது நல பள்ளியின் நிபுணர்கள் சமீபத்தில் ஆய்வு நடத்தினார்கள்.
இந்த கல்லூரியில் படிக்கும் 86 ஆயிரம் பெண்களிடமும், சுகாதாரதுறை படிப்பு மேற்கொண்ட 17,104 ஆண்களிடமும் நீண்ட கால ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, அவர்களின் சமையல் முறை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
ஆய்வில் பங்கேற்பதற்கு முன்பு இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் புற்று நோய் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆய்வு முடிந்த பின்னர் அதில் பங்கேற்றவர்களில் கிரில்டு மற்றும் வறுத்த இறைச்சி வகைகள், சிக்கன் மற்றும் மீன் சாப்பிட்டவர்களில் 37,123 பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் பாதித்து இருந்தது.

இத்தகவல் அமெரிக்க இருதய கழகத்தின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இறைச்சி, சிக்கன் மற்றும் மீன்களை அதிக அளவு வெப்பத்தில் சமைக்கும் போது அவற்றில் உள்ள இன்சுலின் அளவு அழற்றி, விஷத்தன்மை போன்றவை அதிகரிக்கிறது.
அவை ரத்தக் குழாய்களின் உள் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு இருதய நோய்கள் உருவாகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous இந்த நடிகைக்கு திருமண வாழ்க்கை தித்திக்குதாம்
Next விமானத்திலிருந்து வீழ்ந்த பணிப் பெண்ணுக்கு நேர்ந்த அனர்த்தம்

You might also like

டீக்கடை டிப்ஸ்

ஆபிரிக்காவின் அற்புதப் பூங்கா

உலக இயக்கத்திற்கு இயற்கையின் சமநிலைத் தன்மை மிகவும் இன்றியமையா ஏதுவாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி, நகரீக மேம்பாடு மற்றும் கால மாற்றத்தினால் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இடைவெளி சற்றே நீண்டு செல்கின்றது என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தமாகும். எனினும் உலகின் சில

டீக்கடை டிப்ஸ்

கணனி இன்றி கரும்பலகையில் கணனி கற்கும் மாணவர்கள்

கானாவில் – வறுமையின் மத்தியிலும் கணினிக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன. கானாவின் – செக்கிடோமஸ் பெட்னிஸ் ஜூனியர் பாடசாலையில் தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறி ஆசிரியராகக் கடமை புரிகிறார் 33 வயதான ரிச்சட்

டீக்கடை டிப்ஸ்

பூமிக்கு வெளியில் அதி சொகுசு ஹோட்டல்

ஆச்சரியம் ஆனால் உண்மை, விண்வெளியில் மக்கள் பயன்பாட்டிற்காக அரோரா ஸ்டேஷன் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுவாக மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஹோட்டல்கள் கட்டப்படுவது வழக்கம். ஆனால் ஓரியன் ஸ்பேன் என்ற விண்வெளி