விமானத்திலிருந்து வீழ்ந்த பணிப் பெண்ணுக்கு நேர்ந்த அனர்த்தம்

விமானத்திலிருந்து வீழ்ந்த பணிப் பெண்ணுக்கு நேர்ந்த அனர்த்தம்

விமானத்திலிருந்து வீழ்ந்த பணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று உகண்டாவில் இடம்பெற்றுள்ளது.
உகாண்டாவில் விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத பிதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உகாண்டாவின் எண்டேபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.729 என்ற விமானம் தயாராக இருந்தது. அப்போது விமான பணிப்பெண் ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறந்து சரிப்பார்த்துள்ளார்.
அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக கீயே விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது. உடனடியாக அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். அந்த பணிப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.
விமானத்தில் இருந்து பணிப்பெண் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தகுந்த உதவிகள் தரப்படும் என்று விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது

Previous இறைச்சியை இவ்வாறு சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்து
Next அடிக்கடி ஆன்டி பயோடிக் எடுத்துக் கொள்பவர்களின் கவனத்திற்கு

You might also like

டீக்கடை டிப்ஸ்

கேம் விளையாட தடை போட்ட அக்காவை கொன்ற 9 வயது தம்பி

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை போட்ட அக்காவை, 9 வயதான தம்பியொருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு

டீக்கடை டிப்ஸ்

ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றனவா?

வணக்கம், வந்தனம் நமஸ்காரம் மக்களே.. ஒரு காரசாரமான அலசல், பதிவினைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும் முன் வைக்கலாமே… மனித மனங்களில் உள்ள உணர்வுகளிற்கு நாம் கடிவாளம் போட்டு, அவ் உணர்வுகளைக் கட்டி வைக்க நினைக்கின்ற போது ஏற்படுகின்ற விளைவுகள் பற்றி

டீக்கடை டிப்ஸ்

ஆண்மைக்கு ஆப்பு வைக்கும் அன்றாடம் நாம் உண்ணும் உணவு …! ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் தான்..!

ஆண்மை குறைப்பாடு இன்றைய ஆண்களின் பெரிய கவலை .வெளிய சிரிக்கிறேன் உள்ள அழுகிறன் கதை தான் வாழ்க்கையில் நடக்கிறது . சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாத இருப்பது இந்த ஆண்மை குறைப்படு தான் .அதற்கு காரணம் அன்றாடம் நாம் உண்ணும் உணவு