துடுப்பாட்டத்தில் அபார சாதனை படைத்த இந்திய வீரர்

துடுப்பாட்டத்தில் அபார சாதனை படைத்த இந்திய வீரர்

இந்திய அணியின் விக்கட் காப்பாளர் விர்திமன் சஹா அபார சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் சஹா 20 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். இதில் 16 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை
மேற்கு வங்காள மாநிலத்தில் ஜேசி முகர்ஜி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலிகட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் – மோகுன் பகன் அணிகள் மோதின.

முதலில் களம் இறங்கிய பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மோகுன் பகன் அணியின் விருத்திமான் சஹா, சுபோமோய் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சஹா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மோகுன் பகன் அணி 7 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 154 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சஹா 20 பந்துகளை சந்தித்து 14 சிக்ஸ், 4 பவுண்டரியுடன் 102 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். சிக்சர் மூலம் 84 ரன்களும், பவுண்டரி மூலம் 16 ரன்களும், இரண்டு ஒரு ரன்கள் மூலமாக இந்த சாதனையை எட்டியுள்ளார். ஸ்டிரைக் ரேட் 510 ஆகும். 12 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த சஹா, அடுத்த 8 பந்தில் 102 ரன்னை தொட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி சஹாவை 5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு குறுகிய காலமே உள்ள நிலையில், இந்த சாதனை சஹாவிற்கு நம்பிக்கையூட்டிள்ளது.

Previous அனாலிடிகா நிறுவனத்தில் சோதனை?
Next திட்டமிட்டபடி திரைக்கு வருமா காலா

You might also like

நிமிடச் செய்திகள்

வன்புணர்வை நேரில் பார்க்க வற்புறுத்தப்படும் தெற்கு சூடான் சிறுவர்கள்

தங்களது தாய் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்படுவதை நேரில் பார்ப்பதற்கு தெற்கு சூடானில் உள்ள சிறுவர்கள் வற்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு 40 அதிகாரிகள் காரணமாக இருக்கலாம்

நிமிடச் செய்திகள்

காணாமல் போயிருந்தவர் சடலமாக மீட்பு ! – கம்பலையில் சம்பவம் !!

நான்கு நாட்களாக காணமல் போயிருந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது . குறிப்பிட்ட நபர் 79 வயதுடைய WM ஜெயசேனா எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மரியாவத்த பலாகுடமக்க

நிமிடச் செய்திகள்

சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. உலக அளவில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்;ச்சி பதிவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்தில் சுமார் 25 மில்லியன் சிறுவர்