நடிகை பூஜாவின் சிகிச்சைக்காக பணம் வழங்கிய நடிகர்

நடிகை பூஜாவின் சிகிச்சைக்காக பணம் வழங்கிய நடிகர்

நோய்வாய்ப்பட்டு அவதியுறும் நடிகை பூஜா தட்வாலின் சிகிச்சைக்காக நடிகர் ரவி கிஷன் பண உதவி வழங்கியுள்ளார்.
சல்மான்கானுடன் ‘வீர்காடி’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாகவும் இந்துஸ்தான், சிந்தூர் கி கவுகாந்த் உள்பட மேலும் பல படங்களிலும் நடித்துள்ள பூஜா தட்வால் காசநோய் தாக்கி மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் கணவரும், குடும்பத்தினரும் ஆஸ்பத்திரியில் அவரை விட்டு விட்டு சென்று விட்டனர்.
பூஜா தட்வால் கையில் பணம் இல்லாமல் தவித்தார். அவர் மீது சிலர் பரிதாபப்பட்டு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். தனது நிலை குறித்து பேசி வீடியோ ஒன்றை பூஜா தட்வால் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டார். அதில் 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு காசநோய் வந்துவிட்டது என்றும், சல்மான்கானிடம் உதவி பெற முயற்சித்தேன். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்ததும் இந்தி நடிகர் ரவி கிஷன் அவருக்கு உதவ முன்வந்தார். தனது உதவியாளர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பண உதவி செய்தார். பூஜா தட்வாலும், ரவி கிஷனும் 1997-ல் வெளியான தம்ஸ் பியார் கோ கையா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். சல்மான்கானிடம் இருந்து பூஜா தட்வாலுக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை.

Previous இந்தியன்2 படத்தில் கதை வசனத்தை எழுதும் பிரபலம்
Next வித்தியாசமான இடத்தில் மக்களை சந்திக்கும் நடிகர் கமல்

About author

You might also like

சினிமா

ரஜினி கட்சி தொடங்க கால தாமதமாகுமா?

சுப்பர் ஸ்டார் ரஜினி கட்சி தொடங்குவதற்கு காலம் தாமதமாகக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருவதால் புதிய கட்சி அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் ஒத்திவைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில்

சினிமா

பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்?

பிரதமா நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று பாரதிராஜா

சினிமா

காவிரி விவகாரத்தில் விளையாட வேண்டாம் என கமல் எச்சரிக்கை

காவிரி விவகாரத்தில் விளையாட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஓட்டுக்காக இவ்வாறு விளையாடக் கூடாது என அவர் குறிப்பிட்ள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்