அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பதவி நீக்குமாறு உத்தரவு

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பதவி நீக்குமாறு உத்தரவு

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் சுமித்தை பதவி நீக்குமாறு அரசாங்கம் கிரிக்கட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டதால் ஸ்டீவன் சுமித்தை தலைவர்; பதவியில் இருந்து நீக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டது.
ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. வீரர்கள் அறையில் ஏற்பட்ட மோதல், களத்தில் வாக்குவாதம், ரசிகர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் மோதல் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி உள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் பான்கிராப்ட் பீல்டிங் செய்த போது பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார்.

நடுவர்கள் இதை கண்காணித்து விசாரித்தனர். அப்போது பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டார். அதோடு ஆஸ்திரேலியா துலைவர்; ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டு உள்ளார். பந்தின் தன்மையை மாற்றி வெற்றி பெற ஆஸ்திரேலியா கையாண்ட அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சுமித்தின் ஒப்புதலால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒருமைப்பாட்டு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்ட சிறிது நேரத்திலேயே சுமித்தை தலைவர்; பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு அரசு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டது.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறும் போது “பந்தை சேதப்படுத்திய விவகாரம் மிகவும் அதிர்ச்சியானது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். இதுகுறித்து நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவிக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளேன்” என்றார்.

Previous திட்டமிட்டபடி திரைக்கு வருமா காலா
Next இந்த நடிகைக்கு மே மாதம் திருமணமாம் உங்களுக்குத் தெரியுமா?

You might also like

இலங்கைச் செய்தி

வலி சுமக்கும் இலங்கை தமிழருக்கு கனடா பிரதமர் கொடுத்த நற்செய்தி..!

கனடா பிரதமர் எப்போதும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர் என்பது அனைவரும் அறிந்தது தான் . இம்முறையும் அதை நிரூபித்து உள்ளார் . மே 18 நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அன்று தன் அறிக்கையை விட்டுள்ளர் . இலங்கை

நிமிடச் செய்திகள்

தினகரன் புதிய கட்சி ஆரம்பிக்கின்றார்

குக்கர் சின்னம் மற்றும் தான் கேட்ட கட்சியின் பெயரை ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரையில் வரும் 15-ம் தேதி புதிய கட்சியின் பெயரை டி.டி.வி தினகரன் அறிவிக்க உள்ளார். டி.டி.வி.தினகரனுக்கு பிர‌ஷர் குக்கர் சின்னத்தையும் அவர் கோரும் கட்சியின்

நிமிடச் செய்திகள்

எனக்கு இவ தான் வேணும்’..தீ குளித்த இராணுவ வீரரால் பரபரப்பு..!

காதலால் கொலைகள் தற்கொலை அதிகரித்து கொண்டே இருக்கிறது இதற்கு காரணம் என்ன என்பது புரியாத புதிர் தான் .. தமிழ்நாட்டில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால், தீக்குளித்த ராணுவ வீரரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அரக்கோணத்தை