பாகிஸ்தானில் 4 குழந்தைகளை வெட்டிக் கொன்ற தந்தை

பாகிஸ்தானில் 4 குழந்தைகளை வெட்டிக் கொன்ற தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் சாரா-இ-ஆலம்கிர் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப்(57).
மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்த அய்யூப், நேற்று மனைவி வெளியே சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளை கோடரியால் சரமாரியாக தாக்கினார்.

மனதை பதைபதைக்க வைக்கும் இந்த கொடூர தாக்குதலில் அலி ஷான்(14), நாடியா(10), இஷா(9) மற்றும் ஐமென்(8) ஆகிய 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தனர்.

குழந்தைகளின் கதறல் ஓசையை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் முஹம்மது அயூபை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த வாரம் லாகூர் அருகேயுள்ள அஸ்கரி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் தனது 3 குழந்தைகளின் கழுத்தை நெரித்து ஒரு பெண் கொன்ற அதிர்ச்சி விலகும் முன்னரே லாகூர் நகரில் இருந்து சுமார் 225 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காம்பி மேரா கிராமத்தில் 4 குழந்தைகளையும் தந்தையே கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous எத்தனை நிமிடங்கள், எவ்வளவு நீரில் குளிக்க வேண்டும் தெரியுமா?
Next புதிய வழியில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் சுனைனா

You might also like

நிமிடச் செய்திகள்

கண்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு

கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. கண்டி பிரதேச செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற இக்கூட்டத்திலேயே மேற்படி நஷ்டஈட்டுத்தொகைகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த கலந்துரையாடலின் போது, கண்டி

நிமிடச் செய்திகள்

நான் மரணத்தின் வாயிலில் நிக்கிறேன்..! பெண்ணின் உருக்கமான கடிதம். கண்ணீரில் கணவன் ..!

மனித உயிர்கள் இப்படி அழிகிறதே என்று நினைக்கும் போது கண்கள் கலங்குகிறது . ஒரு பக்கம் கொலை என்றால் இன்னொரு பக்கம் நோய்கள் . உயிர்களை காப்பாற்ற போராடும் வைத்தியர்களை விட தாதிகளை தான் பாதிக்கின்றது தொற்று நோய்கள் அந்த வரிசையில்

நிமிடச் செய்திகள்

பிரித்தானியாவிற்கு பதிலடி கொடுக்கும் ரஸ்யா

பிரித்தானிய தூதுவர்களை வெளியேற்றுவதற்கு ரஸ்யா தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவிலிருந்து ரஸ்ய தூதுவர்கள் வெளியேற்ற எடுத்த தீர்மாமனத்திற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய