இந்த நாட்டில் வேலை செய்யக் கிடைத்தால் அதிர்ஸ்டம்தான்

இந்த நாட்டில் வேலை செய்யக் கிடைத்தால் அதிர்ஸ்டம்தான்

பல நாடுகள் தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்வதில் தீவிர கவனம் செலுத்துவதில்லை எனினும் சில நாடுகளின் நிர்வாகங்கள் தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்வதில் மிகுந்த கரிசனை காண்பித்துக்கொள்ளும். அந்த வகையில் தென்கொரிய அரசாங்கம் பணியாளாகளின் நலனை உறுதி செய்ய புதிய சட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளது.
பணியாளர்கள் கூடுதலான நேரம் வேலை செய்வதை தவிர்க்கும் வகையில் இரவு 8 மணிக்கு மேல் அரசு அலுவலக கம்ப்யூட்டர் இணைப்புகளை துண்டிக்க தென்கொரியா அரசு தீர்மானித்துள்ளது.
உலகிலேயே தென்கொரியாவில் உள்ள மக்கள் அதிகமான நேரம் பணியாற்றுகின்றனர். அவர்கள் வேலை நேரத்தை விட கூடுதலான நேரம் பணியாற்றுகின்றனர். இதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை குறைக்க தென்கொரியா அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள அரசு அலுவலகங்களில் இரவு 8 மணிக்கு மேல் அனைத்து கம்ப்யூட்டர் இணைப்புகளை துண்டிக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முதல்கட்டமாக மார்ச் 30-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இரண்டாவது கட்டமாக ஏப்ரல் மாதம் முதல் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு அனைத்து கம்ப்யூட்டர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். அடுத்த மே மாதம் முதல் அனைத்து வெள்ளிக்கிழமையிலும் 7 மணிக்கு கம்ப்யூட்டர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது தென்கொரியா பணியாளர்கள் ஆண்டிற்கு ஆயிரம் மணி நேரம் அதிகமாக பணியாற்றுகின்றனர். சமீபத்தில் தென்கொரிய பாராளுமன்றத்தில் பணியார்கள் ஒரு வாரம் வேலைப்பார்க்கும் அதிகபட்ச நேரத்தை 68 லிருந்து 52 ஆக குறைக்க வேண்டும் என புதிய சட்டம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Previous கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க பாராளுமன்றம் அழைப்பாணை
Next படத்தில் ரகுமான் இசையமைக்கின்றார் என தெரிந்ததும் பூரிப்படைந்துள்ள நடிகை

You might also like

டீக்கடை டிப்ஸ்

நியூசிலாந்தில் முயல்களை கொலை செய்யும் வைரஸ் அறிமுகம்

நியூசிலாந்தில் முயல்களை கொலை செய்யும் புதிய வகை வைரஸ் ஒ;று அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாட்டில் அதிகளவில் முயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் இதனால், இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் வைரஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சுர்னுஏ1-மு5 என்னும் வைரஸை பயன்படுத்தி முயல்கள் கொல்லப்பட உள்ளன.

டீக்கடை டிப்ஸ்

ஆண்மையை அதிகரித்து ஆசையை தூண்டும் ஜாதிக்காய்..! இப்படி செய்து பாருங்கள்..!வெறும் 2 ரூபாய் போதுமாம்..!

வெறும் இரண்டு ரூபாயில் ஆண்மை பெருக்க முடியுமா என நீங்கள் கேட்பது புரிகிறது . முடியும் என்கிறது ஆயுர்வேதத்தின் இயற்கை மருத்துவம் .! எப்படி தெரியுமா இதை படியுங்கள் …! இன்று நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்களால் ஆண்மை குறைபாடு

டீக்கடை டிப்ஸ்

பழங்களை தோலுடன் சாப்பிடுபவரா நீங்கள்..!? அப்படியானால் கண்டிப்பாக இதை படியுங்கள்..!

பொதுவாக பழங்கள் சாப்பிட பிடிக்கும். எல்லா பழங்களுமே ஏதாவது ஒரு வகையில் பலன் உள்ளதும் பயனானதும் தான் . ஆனால் அந்த பழங்களை நாம் எப்படி உண்ணுகிறோம் என்ற முறையில் தான் அதன் பயன் முழுமையாக எமக்கு கிடைக்கும் அப்படி கிடைக்கும்