ஐ.பி.எல். போட்டி ஆரம்ப நிகழ்வில் நடனமாடுவதற்கு ஐந்து கோடி ரூபா கேட்ட நடிகர்

ஐ.பி.எல். போட்டி ஆரம்ப நிகழ்வில் நடனமாடுவதற்கு ஐந்து கோடி ரூபா கேட்ட நடிகர்

ஐ.பி.எல் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் நடனமாடுவதற்கு ஐந்து கோடி ரூபாவை கட்டணமாக நடிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

ரன்வீர் சிங் நடனம் ஆட, ரூ. 5 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதை அறிந்த மற்ற நடிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த மாதம் (ஏப்ரல்) நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைத்துள்ளனர். இதில் 15 நிமிடங்கள் அவர் நடனம் ஆடுகிறார். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மற்ற இந்தி நடிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘பத்மாவத்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் அவர் நடித்து இருந்த அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் பேசப்பட்டது. இவர் 2010-ல் பேன்ட் சர்மா பாராத் என்ற படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். பாமே டாக்கீஸ், ராம்லீலா, லூதெரா, கில் தில், பஜிரோ மஸ்தானி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
ரன்வீர் சிங்குக்கு இந்தியில் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவருக்கும் இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர். இதற்காக இருவரும் திருமண நகைகள், உடைகள் வாங்கி வருகிறார்கள்.

Previous அக்ஷய் குமார் தனது மனைவிக்காக செய்த காரியம்
Next ஸ்டிரைக் பிரச்சினைகளை தாண்டி வெளிவருமான நயன்தரா படம்

About author

You might also like

சினிமா

சுப்பர் ஹிட் கூட்டணி மீளவும் இணைவு

பல சுப்பர் ஹிட்களை கொடுத்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் மீளவும் இணைந்து திரைப்படமொன்றில் பணியாற்ற உள்ளனர். வேல், ஆறு, சிங்கம் 1, 2, 3 ஆகிய சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா

சினிமா

தெலுங்கு பட ரீ மேக்கில் நடிக்கும் தனுஷ்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் என பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற “நீடி நாடி ஒகே கதா” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. “வேலையில்லா பட்டதாரி-2” படத்திற்கு பிறகு தனுஷ் தற்போது

சினிமா

இன்று ஓவியா பிறந்த நாளுக்கு ஆரவ் செய்த செயல் ..! மகிழ்ச்சியில் ரசிகர்களும் ஓவியாவும்..!

எல்லாராலும் விரும்பப்படும் பிக் பாஸ் ஓவியாவின் பிறந்த நாள் இன்று …பிறந்த நாள் என்றாலே கொண்டாட்டம் தானே. . பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் காதலர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டவர்கள் ஆரவ்-ஓவியா . நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி