கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க பாராளுமன்றம் அழைப்பாணை

கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க பாராளுமன்றம் அழைப்பாணை

கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க பாரர்ளுமன்றம் அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மற்றும் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆகியோருக்கு அமெரிக்க பாராளுமன்ற குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பேஸ்புக், கூகுள் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க அமெரிக்க பாராளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஜேக் டார்சி ஆகியோர் ஏப்ரல் 10-ம் திகதிக்குள் பாராளுமன்ற நீதித்துறை குழுவின் முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கிய விவகாரம் பூதாகாரமாய் வெடித்தது.

இதேபோல், பிரிட்டன் நாட்டில் பேஸ்புக் பயன்படுத்தி வருபவர்களைப் பற்றிய தகவல்களும் களவாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் அல்லது அவரது நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி பாராளுமன்ற விசாரணை கமிட்டியின் முன்னர் ஆஜராகி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கமிட்டியின் விசாரணையில் சூக்கர்பர்க் ஆஜராக மாட்டார். அவருக்கு பதிலாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி மைக் ஸ்குரோப்ஃபெர் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு காலத் தடை
Next இந்த நாட்டில் வேலை செய்யக் கிடைத்தால் அதிர்ஸ்டம்தான்

You might also like

நிமிடச் செய்திகள்

கனடா பிரதமர் – மோடி சந்திப்பு 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடில்லி: அரசு முறை பயணமாக வந்துள்ள, கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ருடேவை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சந்தித்து, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் தொடர் பாக, ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வட

நிமிடச் செய்திகள்

உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் நடவடிக்கை

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாரதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்ய உள்ளதாக, விசேட அறிக்கை ஒன்றின்

நிமிடச் செய்திகள்

பாதுகாப்பிற்காக பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள சீனா

சீன அரசாங்கம் பாதுகாப்பு செலவிற்காக பாரியளவில் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. சீன அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் 1.11 ட்ரில்லியன் யூவானை பாதுகாப்பிற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்வரும் ஆண்டுக்காக இவ்வளவு பாரிய தொகையை பாதுகாப்பு செலவீனமாக ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டை