கமல், ரஜினியை 46 லட்சம் பேர் டுவிட்டரில் பின்பற்றுகின்றனர்

கமல், ரஜினியை 46 லட்சம் பேர் டுவிட்டரில் பின்பற்றுகின்றனர்

தமிழ்த் திரைத்துறையின் அதி உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை டுவிட்டரில் இதுவரை 46 லட்சம் பேர் பின்பற்றுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் ரஜினிகாந்த். உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன்.

தமிழ் ரசிகர்களிடம் மட்டுமல்ல, இந்திய அளவிலும் பிரபலமான இருவரும் இன்றுவரை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி, கமல் படம் என்றாலே ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பு இருக்கிறது. 2 பேருமே மிகப்பெரிய நட்சத்திரங்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ திரைக்கு வர தயாராகி வருகிறது. ‘காலா’ படம் அடுத்த மாதம் ‘ரிலீஸ்’ ஆகிறது. இதுதவிர புதுப்படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ திரைக்கு வரஇருக்கிறது. ‘சபாஷ் நாயுடு’ படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இப்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

பிரபல நடிகர்கள் என்ற முறையில் ரஜினி, கமல் இருவருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் அபிமான நடிகர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கமல் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரஜினியும் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார். ரஜினிமன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கையும் நிர்வாகிகள் நியமனமும் நடந்து வருகிறது.

கமல்ஹாசன் ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கமலின் ரசிகர்களும் அரசியல் அபிமானிகளும் அவருடைய டுவிட்டர் பக்கத்தை தொடர்கிறார்கள்.

இதுபோல் ரஜினியும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் அரசியல் அபிமானிகளும் இந்த டுவிட்டர் பக்கத்தை தொடர்ந்து வருகிறார்கள். ரஜினி, கமல் டுவிட்டர் பக்கங்களை தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரஜினி டுவிட்டர் பக்கத்தை 46 லட்சம் பேரும், கமல் டுவிட்டர் பக்கத்தை 46 லட்சம் பேரும் தொடர்கிறார்கள்.

அரசியலில் களம் இறங்கும் ரஜினி, கமல் இருவரையும் தொடர்பவர்கள் தலா 46 லட்சம் பேர் என்பது பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அரசியலில் இவர்களுக்கு மக்கள் ஆதரவும் இதுபோல் சரி சமமாக இருக்குமா? என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்களிடம் எழுப்பி உள்ளது

Previous வாய் துர்நாற்றத்த தடுக்க சில எளிய வழிகள்
Next என்னை நோக்கிப் பாயும் தோட்ட தாமதமாக இதுவாக காரணம்?

About author

You might also like

சினிமா

எனக்கு நடிகர் பிரபுடன் உறவு இருந்தது..! குஷ்புவின் பரபரப்பு பேட்டி..!

குஷ்பு இந்த பெயரை உச்சரிக்காத எவரும் இருந்திருக்க முடியாது என்று தான் சொல்ல முடியும் கோயில் கட்டும் அளவு மக்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் 90களில் நடிகைகளிலேயே புகழின் உச்சத்தில் நின்று கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர், ரஜினி,

சினிமா

சிக்ஸ் பேக்கில் ..பிரபல தமிழ் நடிகையின் அதிரடி …! யார் தெரியுமா இது பாருங்கள் அசந்து போவீங்க ..!

ஆண்களுக்கு நிகராய் உடலை பிட்டாக வைத்திருக்க இப்ப எல்லாம் பெண்களும் தயாராகி வருகிறார்கள் இந்த நிலையில் தான் நம்ம நடிகையும் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் சினிமாவில் எப்போதும் ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வைத்து தான் பார்த்திருப்போம். அதற்காகவே அவர்கள்

சினிமா

நடிகர் சங்கக் கட்டடத்தின் வளர்ச்சி குறித்து விஷால் மகிழ்ச்சி

நடிகர் சங்கக் கட்டடம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவது பெரு மகிழ்ச்சி அளிப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் குறித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்