காவிரி பிரச்சினைக்கு ரஜினியின் தீர்வுத் திட்டம்

காவிரி பிரச்சினைக்கு ரஜினியின் தீர்வுத் திட்டம்

தமிழகத்தில் நீண்ட காலமாக காவிரி நிதி தொடர்பிலான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இன்று உச்சநீதிமன்ற கெடு இன்று முடிவடையும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு மவுனமாகவே இருக்கிறது.

உச்சநீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து ரஜினி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

ஹகாவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்.’ இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

Previous நயன்தாராவிற்கு திருமணம் எப்போது தெரியுமா?
Next பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து

About author

You might also like

சினிமா

பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஸ்பெஷல்! பிளாக்பஸ்டர் தான்

நடன புயல் பிரபு தேவி குலேபா நடனம் இன்னும் நம்மை துள்ளி குதிக்க வைக்கிறது. சில நாட்களாக ஹிந்தி படங்களை இயக்கி வந்தவர் மீண்டும் தேவி படம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்த படம் ஓரளவு ஓடினாலும் அண்மையில் வந்த குலேபகாவலி

சினிமா

கமல்ஹாசனுக்கு பெரிய பிரபலங்களிடமிருந்து வந்த ஆதரவுகள்! ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் கமல்ஹாசன் இன்று தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். காலை முதலே இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகிவிட்டது. ரசிகர்களிடையே உற்சாகமும், மக்களிடையே ஆர்வமும் இருப்பதை காணமுடிந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வழக்கம் போல சில அரசியல் விமர்சனங்கள் எழுந்தாலும் கமல் தன் ஸ்டைலில்

சினிமா

தொகுப்பாளினி டிடி எழுதி வைத்த கடிதத்தால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. ! இதோ கடிதம் உங்களுக்காக..!

தொகுப்பாளினி டிடி என்றால் உட்சாகம் என்று தான் அர்த்தம் எத்தனை சோகத்தில் இருந்தாலும் திரையில் அவரை கண்டால் மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொள்ளும் காரணம் தொகுப்பாளினி டிடி எப்போதுமே மிகவும் துறுதுறுவென இருப்பார். நிகழ்ச்சிகளிலும் போட்டியாளர்களாக வருவோரையும் மிகவும் ஜாலியாக மாற்றிவிடுவார்.