நயன்தாராவிற்கு திருமணம் எப்போது தெரியுமா?

நயன்தாராவிற்கு திருமணம் எப்போது தெரியுமா?

தென் இந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாராவின் திருமணம் பற்றி அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், இந்த வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக, இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் இதையே பதிவிட்டவண்ணம் இருக்கிறார்கள். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவரும் காதல் வயப்பட்டதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டதும் பழைய கதை. இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்றும் கிசுகிசுத்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது.

கேரளாவில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க ரகசியமாக நிச்சயதார்த்தம் நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே இருவரும் அமெரிக்காவுக்கு பறந்து ஜாலியாக சுற்றிவிட்டு கேரளா திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டனர்.

இந்த படங்கள் குறித்த கேள்விக்கு, “நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன்” என்று விக்னேஷ் சிவன் பதில் அளித்தார். நயன்தாராவுக்கு இப்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, தெலுங்கில் ‘சை நரசிம்ம ரெட்டி’ என்று கைநிறைய படங்கள் இருக்கிறது. அஜித்குமாரின் விசுவாசம் படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்திலும் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க பேசி வருகின்றனர். அடுத்த சில மாதங்கள் சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருப்பார் என்றும், இந்த வருடம் இறுதியில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கும் என்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Previous காஜல் அகர்வாலின் விருப்பம்?
Next காவிரி பிரச்சினைக்கு ரஜினியின் தீர்வுத் திட்டம்

You might also like

சினிமா

காளி படத்திற்கான தடை நீக்கம்

இசைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காளி’ படத்திற்கு வித்திக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் “காளி”.

சினிமா

நடிகை ஷிவானியின் மெய்யான ஹீரோ யார் தெரியுமா?

தெலுங்கில் அறிமுக நாயகி ஷிவானியின் உண்மையான ஹீரோ யார் என்பதனை மனம் திறந்து சொல்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் நிலையில், அப்பா தான் தனது திரை உலக, உண்மையான ஹீரோ என்று கூறியிருக்கிறார். டாக்டர்

சினிமா

மெர்சல் இயக்குனரின் அடுத்த பட ஹீரோ யார் என்று தெரியுமா?

இளைய தளபதி விஜய்யின் மெர்சல் படத்தை இயக்கிய இயக்குனர் அட்லியின் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லி, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம்