சக்கை போடு போடும் ஜி.வி பிரகாஷின் பாடல்…

சக்கை போடு போடும் ஜி.வி பிரகாஷின் பாடல்…

பிரபல இசைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் அண்மையில் பாடிய பாடல் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது, இந்தப் பாடலை சினிமா பிரபலங்களும் ஏனையவர்களும் வரவேற்றுள்ளனர்.
‘எனக்கெனவே’ என்ற வீடியோ ஆல்பம் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ஆன்லைன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலில் தன்னுடன் நடனப்பள்ளியில் நடனம் பயிலும் ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலிக்கும் நாயகன் அவளிடம் தன்னுடைய காதலை வித்யாசமாக ப்ரபோஸ் செய்வது போல் அமைந்துள்ள கிளைமாக்ஸ் காட்சி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

ரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர், நடிகையர், இயக்குநர்கள் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்பாடலை பாராட்டியுள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கிகல்ராணி, சஞ்சனா ஷெட்டி, சாந்தனு பாக்யராஜ், ஹரிஷ் கல்யாண், கயல்சந்திரன், நட்சத்திர மேலாளர் ஜெகதிஷ் மற்றும் திரையுலகத்தினர் பலர் இப்பாடலை பாராட்டியுள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ்குமார் பாடியுள்ள இப்பாடலுக்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் ஸ்ரீ இயக்கியுள்ளார். படத்தொகுப்பு பிரவீன் கே.எல், ஒளிப்பதிவு சுந்தர் ராகவன். ஜெகதீசன் ஆர்.வி, நவநீதபாபு மற்றும் நரேந்திரன் சுந்தரம் தயாரித்துள்ள இப்பாடலில் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் ராகேஷ் ராஜன் ஆகியோர் கதாநாயகி, கதாநாயகனாக நடித்துள்ளனர்.

கயல் சந்திரன் உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் கார்த்திக் ஸ்ரீயின் முதல் படத்துக்காக தாங்கள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்களுடைய வெள்ளித்திரை படைப்புக்காக தயாராகிவரும் இக்குழுவுக்கு இது மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது குறிப்பிடதக்கது.

Previous நாடே நிர்வாணமாகிவிடும் எச்சரிக்கும் வைரமுத்து
Next பல மணித்தியாலங்கள் மேக்கப்போட்டு நடித்து வரும் இளம் நடிகர்

About author

You might also like

சினிமா

நிஜ “காலா” வின் மகன் இவர் தானாம். ! ரஜினியின் “காலா” படத்திற்கு மற்றுமொரு இடி. நஷ்ட ஈடு கோரி “காலாவின் மகன் வழக்கு..!

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே தொடங்கியுள்ளது அதற்கு காரணம் ஒரு வேளை அவரது அரசியல் வரவாக கூட இருக்கலாம் .அவர் எதை தொட்டாலும் பிரச்சினையில் தான் முடிகிறது . அவரும் எத்தனை நாளைக்கு தான் வலிக்காத

சினிமா

மலையாள சுப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

மலையாள சுப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் முதல் முறையாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகை திரைப்படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் அனுஷ்கா, முதல் முறையாக மலையாளப் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சொந்த ஊராக

சினிமா

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் – பிரபு

அரசியலில் கால் வைத்துள்ள நடிகர்கள் ரஜினியும், கமலும் தமிழக மக்களுக்கு எப்போதும் நல்லது செய்ய வேண்டும் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்   நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் கால்பதித்து விட்டார். நடிகர்