நாடே நிர்வாணமாகிவிடும் எச்சரிக்கும் வைரமுத்து

நாடே நிர்வாணமாகிவிடும் எச்சரிக்கும் வைரமுத்து

விவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நாடே நிர்வாணமாகிவிடும் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை அமைவது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு மவுனமாகவே இருக்கிறது.

உச்சநீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என்று கூறியிருந்தார்கள். தற்போது கவிஞர் வைரமுத்துவும் காவிரி மேலாண்மை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்’ என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Previous பிரிட்டனில் மெர்சல் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கௌவரம்
Next சக்கை போடு போடும் ஜி.வி பிரகாஷின் பாடல்...

You might also like

சினிமா

ஆஸ்கார் விருதுகள்

90 ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தி ஷேப் ஒப் வாட்டர் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை வென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது டார்க்கஸ்ட் ஹவர் திரைப்படத்தில் நடித்த காரி ஓல்;ட்மான் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது த்ரீ பில்போர்ட்ஸ் எப்பிங்

சினிமா

நடிகர் திலகமாக திரையில் தோன்ற பாக்கியம் கிடைத்த பிரபலம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக திரையில் தோன்றுவதற்கு அவரது பேரன் விக்ரம் பிரபுவிற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் நடிகையர் திலகம் திரைப்படத்தில், சிவாஜியின் வேடத்தை அவரது பேரனான விக்ரம் பிரபு ஏற்று

சினிமா

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடிகர் சங்கம் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டமொன்றில் குதிக்கத் தீர்மானத்துள்ளது. மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கோரியும், ஆலையை மூடுமாறு வலியுறுத்தியும் எதிர்வரும் ஏப்ரல் 8ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன