விவசாயத்தை கற்றுக்கொள்ளும் நடிகர் கார்த்தி

விவசாயத்தை கற்றுக்கொள்ளும் நடிகர் கார்த்தி

பிரபல நடிகர் கார்த்தி விவசாயம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
நடிகர் கார்த்தி விவசாயத்தில் உள்ள ஆர்வத்தால் நேரடியாக சென்று விவசாய முறையை நேரில் பார்த்தும், விவசாயம் செய்கிறவர்களின் அனுபவங்களையும் கேட்டு அறிந்து கொள்கிறார்.
நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். விவசாயம் சார்ந்த புகைப்படங்களையும் வெளியிடுகிறார். சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே விளைநிலங்களுக்கு நேரில் சென்று இயற்கை விவசாய முறையை நேரில் பார்த்தார். அங்கு விவசாயம் செய்கிறவர்களின் அனுபவங்களையும் கேட்டு அறிந்தார். அங்குள்ள நிலத்தில் காளைகளை ஏரில் பூட்டி உழுதார்.

இதுகுறித்து கார்த்தி கூறியதாவது:-

“விளைநிலங்களில் நடக்கும் இயற்கை விவசாயத்தை நேரில் பார்த்தேன். விவசாயிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம். அங்கே கிடைத்த இயற்கையான காற்று, அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் விவசாய நிலங்களுக்கு சென்று பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு கார்த்தி கூறினார்.

Previous ஊர் சுற்றித் திரிய ஆசைப்படும் அந்த நடிகை
Next விசாலமான பாலத்தை உருவாக்கி சீனா சாதனை

About author

You might also like

சினிமா

காவிரி பிரச்சினைக்கு ரஜினியின் தீர்வுத் திட்டம்

தமிழகத்தில் நீண்ட காலமாக காவிரி நிதி தொடர்பிலான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இன்று உச்சநீதிமன்ற கெடு இன்று முடிவடையும் நிலையில், நடிகர்

சினிமா

தந்தை கமல் கூறிய அறிவுரை மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது மகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார், அந்த அறிவுரைகள் தொடர்பில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் கருத்து வெளியிட்டுள்ளார். தனக்கு கமல்ஹாசன் சில அறிவுரைகள் கூறியிருப்பதாக ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது “தினமும் படுக்கைக்கு செல்லும்போது அன்று நடந்த

சினிமா

நிகழ்ச்சியை விட்டு போகும் சூப்பர் சிங்கர் ராஜலக்ஸ்மி ..!? கண்ணீருடன் பதற வைக்கும் காட்சி ..!காரணம் ..!? ரசிகர்கள் கவலையில் ..!

ஒவ்வொரு டிவி நிகழ்ச்சியிலும் யாராவது ஒருவரை மக்களுக்கு பிடிக்கும் அப்படி பிடித்தவர்களில் ஒருவர் தான் கிராமத்து பட்டாம் பூச்சி ராஜலட்சுமி . ஏன் எதற்கு என்ற காரணம் தெரியாத போதும் அவரது குரலுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும்