என்றும் எழிலான தோற்றத்துடன் ஜொலிக்க விரும்பம் பெண்ணா நீங்கள்

என்றும் எழிலான தோற்றத்துடன் ஜொலிக்க விரும்பம் பெண்ணா நீங்கள்

பெண்கள் பொதுவாக எழிலான தோற்றத்துடன் ஜொலிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள், அவ்வாறானவர்கள் இந்த உணவு வகைகள் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பெண்களுக்கு எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெண்கள் அழகாக இளமையாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.
பெண்கள் என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள்
நாம் அனைவருமே அழகான, இளமையான தோற்றம் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களே! இல்லை என மறுத்தாலும் நம் அடிமனதில் இந்த ஆசை கண்டிப்பாக ஒட்டிக்கொண்டு தான் இருக்கும்..! எனவே, அனைவரும் அழகாக இளமையாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள் குறித்து இங்கு படித்தறிவோம்..!

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ நிறைந்திருக்கிறது. எனவே இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் இவற்றில் உள்ள வைட்டமின் ‘சி’, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நீர்ச்சத்து நிறைந்துள்ள இந்தப் பழங்களில் லைகோபீன் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சருமச் செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாகும்.

தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.

நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நன்கு பொலிவு பெறும். அதிலும் குறிப்பாக, வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபீன், லுட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

Previous தலையின்றி 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த பறவை
Next மக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியமில்லை – கமல்ஹாசன்

About author

You might also like

மருத்துவம்

காது குடைபவரா நீங்கள்..? இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்…!

காது குடைவதை சாதாரண விடயம் என நாம் நினைக்கின்றோம் . ஆனால் எத்தனை ஆபத்தானது தெரியுமா..? இதை படித்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . காது குடையும் பழக்கம் ஆபத்தானதா? நம்மில் பலரிடம் பொதுவாகக் காணப்படும் பழக்கம், காது குடைவது. சிலர் காது

மருத்துவம்

மல்லிகையை இதற்கெல்லாம் பயன்படுத்த முடியுமா

மல்லிகைப் பூ என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கடவுளுக்கு அல்லது பெண்களுக்கு சூடுவதற்காக என்பது மட்டுமேயாகும், எனினும் மல்லிகைப் பூவில் அத்தனை மருத்துவ நலன்கள் காணப்படுகின்றன. வானவில் நேயர்களுக்காக நாம் மல்லிகையின் மகத்துவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். மருத்துவ குணம் கொண்ட

மருத்துவம்

கிராம்பை சுடு நீரில் போட்டால் நடக்கும் அதிசயமும் தீரும் நோயும் ..!

குட்டி குட்டி மருத்துவ குறிப்புகள் உங்களுக்கு தேவையானதாக இருக்கும் ..அதனால் பகிர்கிறோம் .. கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் B, C, E, J, K போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீயை குடிப்பதால், கிடைக்கும் அற்புத