தலையின்றி 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த பறவை

தலையின்றி 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த பறவை

தலையின்றி 18 மாதங்கள் வரையில் பறவையொன்று உயிர் வாழ்ந்த அதிசயம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோழி ஒன்று 18 மாதம் உயிருடன் இருந்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு கொலராடோ. இந்நாட்டில் கெட் லெஸ் சிக்கன் என்ற விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜீன் மாத தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டில் உள்ள ப்ரூடா நகரில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இந்த விழாவிற்கு முக்கிய காரணம் மைக் என்ற கோழியாகும்.

அதிசய மைக் எனப் பெயரிடப்பட்ட இந்த கோழி தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. ஒருநாள் மைக்கின் உரிமையாளர் சமைப்பதற்காக அதன் தலையை துண்டித்துள்ளார். ஆனால் மைக் தலை துண்டிக்கப்பட்ட பிறகும் உயிருடன் இருந்துள்ளது. இதனை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

கோழியின் மூளையின் முக்கிய பகுதி பாதிக்கப்படாமல் இருந்ததால் கோழி உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், கோழிக்கு உணவானது சிறிய குழாய் மூலம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உணவுக்குழாயில் உணவு சிக்காமல் இருக்க நீரானது சிரஞ் மூலம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 18 மாதங்கள் மைக் உயிரோடு இருந்தது.

இந்த செய்தி பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. ஆனால் 18 மாதங்களுக்கு பிறகு உணவுக்குழலில் உணவு சிக்கி மைக் உயிரிழந்தது. மைக்கை நினைவுகூறும் வகையில் கெட் லெஸ் சிக்கன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

Previous விசித்திரமான சாக்லேட் திருவிழா
Next என்றும் எழிலான தோற்றத்துடன் ஜொலிக்க விரும்பம் பெண்ணா நீங்கள்

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

காயப்பட்டவரை கண்டபடி தூக்காது இப்படி தூக்கிச் செல்லுங்கள்..!

கண்டிப்பாக படிக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள்..! காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள்

டீக்கடை டிப்ஸ்

ஆபிரிக்காவின் அற்புதப் பூங்கா

உலக இயக்கத்திற்கு இயற்கையின் சமநிலைத் தன்மை மிகவும் இன்றியமையா ஏதுவாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி, நகரீக மேம்பாடு மற்றும் கால மாற்றத்தினால் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இடைவெளி சற்றே நீண்டு செல்கின்றது என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தமாகும். எனினும் உலகின் சில

டீக்கடை டிப்ஸ்

ஆண்கள் அந்த விடயத்தில் தயிர் சாதமா…!? சமத்தா என்று பெண்கள் கணிப்பிடுவது இப்படி தானாம்…! ஆண்களே உஷார்..!

ஆண்கள் வித விதமானவர்கள் ..அப்பிடி இல்லை என்றாலும் பெண்கள் வித விதமா கற்பனை பண்ணிக்கொள்வார்கள் ..நடை உடை பாவனைகளை வைத்தே கணிப்பிட்டு விடுவார்கள்…. அப்பிடி கணிப்பீட்டின் அடிப்படையில் இதோ பெரும்பாலும் ஆண்கள் எப்படி பெண்களை கணக்கிடுகிறார்கள் என்று தான் நீங்கள் அறிந்திருப்பீர்கள்,