மக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியமில்லை – கமல்ஹாசன்

மக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியமில்லை – கமல்ஹாசன்

மக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியத்துவம் கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன், மக்கள் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடைபெற்றும் வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று பங்கேற்றார்.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியம் என நினைக்க வேண்டுமா? அப்படி எனில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தான் நல்லது. குடியிருப்பு, விவசாய பகுதிகளில் ஆலை அமைப்பது தவறு.

மத்திய அரசும், தமிழக அரசும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாராமுகமாக நடந்து கொள்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்வேன். நான் புதிதாக விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை, ஐந்து வயதில் இருந்தே எனக்கு விளம்பரத்திற்கு பஞ்சம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Previous என்றும் எழிலான தோற்றத்துடன் ஜொலிக்க விரும்பம் பெண்ணா நீங்கள்
Next உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட கப்பல் இலங்கையில் மீட்பு

You might also like

சினிமா

விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் ஆட்டம் அம்பலம்..! டிடி யா இப்படி என ஷாக் ஆன ரசிகர்கள்..!

டிடி என்று அழைக்கப் படும் திவ்யதர்சினி …அட ஆமாங்க நம்ம டிடி தான் . இவரது இந்த அடக்கம் ஒடுக்கம் கூட ரொம்ப பிடிச்சி இருக்குங்கோ… விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும்

சினிமா

தெலுங்கு பட ரீ மேக்கில் நடிக்கும் தனுஷ்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் என பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற “நீடி நாடி ஒகே கதா” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. “வேலையில்லா பட்டதாரி-2” படத்திற்கு பிறகு தனுஷ் தற்போது

சினிமா

தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்

தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மை நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் முன்னெடுத்து வந்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் இன்று மாலை நடத்திய பேச்சுவார்த்தையில், திரையரங்கு உரிமையாளர்களின்