அழகு சாதனப் பொருளாகும் உப்பு

அழகு சாதனப் பொருளாகும் உப்பு

நாம் பொதுவாக உப்பை உணவில் சேர்ப்பதற்காகவே கடையில் வாங்குகின்றோம், எனினும், உப்பு ஓர் அழகுசாதனப் பொருள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? வாருங்கள் அது பற்றி தெரிந்துகொள்வோம்.
உப்பு நம் அழகு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. குறிப்பாக உப்பு நாம் சந்திக்கும் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.
இங்கு நாம் சந்திக்கும் அழகு பிரச்சனைகளுக்கு உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து காண்போம்.
தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், அதனைப் போக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஷாம்பு பாட்டிலில் 2-3 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் அதனை தலைக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை முழுமையாக நீங்கும். கீழே உப்பின் இதரை அழகு நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1/2 கப் தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பை சேர்த்து கலந்து, பின் அதனைக் கொண்டு உடலை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் அழகாகவும், பொலிவோடும் இருக்கும்.
பாதங்களில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, குதிகால் வெடிப்பைப் போக்க, ஆலிவ் ஆயில் மற்றும் உப்பை சரிசம அளவில் எடுத்து கலந்து, பாதங்களில் தடவி மென்மையாக தேய்த்து ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, பாதங்களில் உள்ள வறட்சி மற்றும் குதிகால் வெடிப்பு போன்றவை முற்றிலும் மறைந்துவிடும்.
வெட்டு காயங்களில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் விரைவில் குணமாக, 2 டீஸ்பூன் உப்பை ஒரு டம்ளர் நீரில் கலந்து, வெட்டு காயங்களின் மீது ஊற்ற வேண்டும். இதனால் ஆரம்பத்தில் சற்று எரிச்சலுடனும், நமைச்சலுடனும் இருக்கும். இப்படி செய்தால், மருந்து வேலை செய்கிறது என்று அர்த்தம்.
வெட்டு காயங்களில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் விரைவில் குணமாக, 2 டீஸ்பூன் உப்பை ஒரு டம்ளர் நீரில் கலந்து, வெட்டு காயங்களின் மீது ஊற்ற வேண்டும். இதனால் ஆரம்பத்தில் சற்று எரிச்சலுடனும், நமைச்சலுடனும் இருக்கும். இப்படி செய்தால், மருந்து வேலை செய்கிறது என்று அர்த்தம்.

Previous குளிர்ந்த நீரை பருகுவது உங்கள் தொப்பையை அதிகரிக்கும் என்பது தெரியுமா
Next உங்கள் தலைமுடி பிரச்சினைகளுக்கு எளிய வழிகளில்தீர்வு

About author

You might also like

மருத்துவம்

கேரட் உண்ணுவதால் இத்தனை நன்மைகளா.? இது வரை நீங்கள் அறியாதவை..! நீங்களே பாருங்கள். !

பொதுவாகவே எல்லா மரக்கறி வகைகளும் நன்மையே தருகின்றது. அது உண்ணும் முறையை பொறுத்து அமைகின்றது . குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை நல்ல பலனை தரும் கேரட் பற்றி தெரிந்துகொள்வோம் .. அன்றாட உணவில் கேரட் சேர்த்தால் இத்தனை நன்மைகள் உண்டா…?

மருத்துவம்

காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுங்கள்..! இலகுவாக இத்தனை நோய்களுக்கு தீர்வு காணலாம்..! அதிகம் பகிருங்கள் ..!

பொதுவாக எமக்கு இயற்கை மருத்துவங்கள் சரியான முறையில் செய்து கொள்ள தெரிவதில்லை அதனால் தான் அதிகம் கவனிப்பதில்லை ஆனால் இலகுவாகவே நோய்களை விரட்டி விடலாம் எப்படி தெரியுமா.? தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் இயற்கையாகவே நம் உடலில் உள்ள

மருத்துவம்

இரண்டு மூன்று நாட்களில் முகப்பருக்களை மாயமாக்க முடியும்

முகப்பரு என்பது எமது இளைஞர் யுவதிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தக் கூடியதொன்றாகும், இந்த முகப்பரு பிரச்சினைக்கு இரண்டு மூன்று நாட்களில் தீர்வு வழங்க முடியும். அது எப்படி என்பதனை வாருங்கள் பார்ப்போம். முகப்பருவால் ஏராளமான மக்கள் தங்கள் அழகையே இழந்துள்ளனர். மேலும்