ஐந்து ஹீரோக்களை ஒரே அறிமுகம் செய்யும் இயக்குனர்

ஐந்து ஹீரோக்களை ஒரே அறிமுகம் செய்யும் இயக்குனர்

இந்த ஆண்டில் ஐந்து புதிய ஹீரோக்களையும், ஐந்து தயாரிப்பாளர்களையும் அறிமுகம் செய்தே தீருவேன் என பிரபல இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இப்படம் எதிர்பார்த்தளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

இந்நிலையில், இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் “இன்று (மார்ச் 31) எனது பிறந்த நாள். இன்று ஹோலி சனிக்கிழமை என்பதால், நாளை எனது பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளேன். இன்றுவரை நான் யாரிடமும் வட்டிக்குப் பணம் வாங்கியதும் இல்லை, கொடுத்ததும் இல்லை.

அசோக் அண்ணனின் மரணம் குறித்து நான் பேசியதால், அந்த பைனான்சியரிடம் பணம் வாங்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் என்னுடன் படம் பண்ணத் தயங்குகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.

பந்து எவ்வளவு வேகமாக தரையில் எறியப்படுகிறதோ, அவ்வளவு வேகமாகப் பந்து மேலே எழும் என்பது அனைவருக்கும் தெரியும். எனது முதல் படத்திலேயே முழுவதும் புது நடிகர்கள், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், புது தயாரிப்பாளர் என்று அனைத்துப் புதியவர்களையும் வைத்து வெற்றி பெற்றவன் நான் ஒருவன் தான், கடந்த 10 ஆண்டுகளில் (கர்வம் அல்ல).

இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்துகிறேன். எனது முதல் படம் ‘ஏஞ்சலினா’, இரண்டாவது படம் ‘ஜீனியஸ்’. இரண்டு படங்களும் நிறைவடைந்துள்ளன. எனது மூன்றாவது படம் ‘சாம்பியன்’, புட்பால் பற்றியது. ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்தப் படத்தைத் தொடங்க உள்ளேன். மற்ற இரண்டு படங்களின் தலைப்புகள், மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவேன்.

இந்த வருடம் முழுக்க முழுக்கப் புதுமையான கதைக்களத்துடன் பயணிக்கப் போகிறேன். எனது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

Previous காவிரி மேலாண்மை பிரச்சினைக்கு எதிராக நடிகர் சங்கம் குரல் கொடுக்கும் - பொன்வண்ணன்
Next புற்று நோய்க்கு மருந்தாகம் மாம்பழம்

You might also like

சினிமா

கொட்டிய வசூல் கலகலப்பு-2 குழுவினர் மகிழ்ச்சி- பாக்ஸ் ஆபிஸ் விவரம்

தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் சோதனையாக தான் தொடங்கியது. ஆம், தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் என பெரிய படங்கள் கூட வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வந்த கலகலப்பு-2 இரண்டு வார முடிவில் சென்னையில்

சினிமா

நடிகர் மாதவனின் மகன் சர்வதேச ரீதியில் பதக்கம் வென்று சாதனை

தென்னிந்திய முன்னணி நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் சர்வதேச ரீதியில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தனது செல்ல மகன் வேதாந்தால் மாதவன் பெருமை அடைந்துள்ளார். நடிகர் மாதவன், சரிதா தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். பார்க்க மாதவன்

சினிமா

ஸ்ரீதிவ்யாவிற்கு டும் டும் டும். மாப்பிள்ளை இவர் தானாம்..!

ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவிற்குள் நுழைந்ததும் எல்லோரும் நினைத்தது ஒரு வலம் வருவார் என்று ஆனால் சில படங்களுடனேயே சுருண்டு விட்டார் . நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின்