விஜய் சேதுபதிக்கு எதிராக முறைப்பாடு?

விஜய் சேதுபதிக்கு எதிராக முறைப்பாடு?

பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடையை மீறி போர்ச்சுக்கல்லில் ஜூங்கா படப்பிடிப்பை நடத்தியதாகவும் அதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்ததாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறப்பட்டு உள்ளது.
‘பீட்சா’ படம் மூலம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. கடந்த வருடம் கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், கருப்பன் படங்களில் நடித்து இருந்தார். தற்போது 96, சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி, இடம்பொருள் ஏவல், செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார்.

‘ஜூங்கா’ படத்தை கோகுல் டைரக்டு செய்கிறார். கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு போர்ச்சுக்கல்லில் நடந்து வருகிறது. பட அதிபர்கள் சங்கத்தின் தடையை மீறி ஜூங்கா படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொண்டதாக திடீர் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஒரு மாதமாக புதிய படங்களை திரைக்கு கொண்டு வரவில்லை. சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டனர். வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகளை நடத்தவும் தடை விதித்து உள்ளனர்.

இந்த தடையை மீறி போர்ச்சுக்கல்லில் ஜூங்கா படப்பிடிப்பை நடத்தியதாகவும் அதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்ததாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, “வேலை நிறுத்த அறிவிப்புக்கு முன்பே வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டோம். படப்பிடிப்புக்கான கட்டணத்தையும் செலுத்தி விட்டோம். விசா உள்ளிட்ட வேலைகளும் முடிந்து விட்டன.” என்றனர்.

படக்குழுவினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Previous நெருக்கமான காதல் காட்சிகளில் அம்ரிதாவிற்கு உதவிய ஹீரோ
Next பிரபல நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலை

About author

You might also like

சினிமா

ஏன் தமிழ் படங்களில் நடிக்க இவ்வளவு நாள் – விளக்கம் கொடுத்த சாய்பல்லவி !

பிரேமம் படத்தின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி. மலர் என்ற ஒரு சின்ன டீச்சர் கதாபாத்திரத்தில் மூலம் அனைவரையும் கவந்தவர். இவர் அடிப்படையில் ஒரு தமிழ்நாட்டு பெண், ஆனால் பல தமிழ் படங்களில் நடிக்க தவிர்த்து மற்ற மொழிகளில் நடித்து

சினிமா

பிரியங்கா கர்ப்பத்திற்கு மா.கா.பா தான் காரணம்! – பிரியங்கா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! வருத்தத்தில் குடும்பங்கள்!

தொலைக்காட்சி என்று எடுத்துக் கொண்டாலே மக்களை ஆட்சி செய்வது சீரியல்கள் தான். அப்படி சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்த தொலைக்காட்சிகள் பல. அதுவும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி புதிய புதியத்தொடர்களை மக்களிடையே அறிமுகபடுத்துவது வழக்கம். அது மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ

சினிமா

பிரபல சீரியல் நடிகை கவிதா தற்கொலை..! அதிர்ச்சியில் திரையுலகம்..! புகைப்படங்கள் இணைப்பு ..!

அடிக்கடி நடிகைகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் காரணம் தான் கண்டறிய முடியாதுள்ளது அந்த வரிசையில் .. சீரியல் நாயகிகளுக்கு எப்போதுமே மக்களிடையே தனி வரவேற்பு இருக்கும். அப்படி மலையாளத்தில் நிறைய சீரியல்கள் நடித்து பிரபலமானவர் கவிதா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வீட்டில்