அடடா மிளகில் இத்தனை நலன்களா?

அடடா மிளகில் இத்தனை நலன்களா?

பொதுவாக நாம் மிளகினை ஒரு சில சமையல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றோம், எனினும், மிளகினை பல நோய்களுக்கான நிவாரணியாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் ஓர் அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் மிளகு. இந்த மிளகை தினமும் சமையலில் சேர்த்து வந்தால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அந்த அளவில் மிளகில் சத்துக்களானது ஏராளமாக உள்ளது.

ஆற்றலை வழங்கும்
கோடையில் மிளகு தண்ணீரைக் குடிப்பது என்பது ஆரோக்கியமானது. எப்படியெனில் பொதுவாக கோடையில் அதிகமாக வியர்வை வெளியேறுவதன் மூலம், உடலின் ஆற்றல் குறையும். ஆனால் இந்த மிளகு நீரைக் குடிப்பதால், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும்.
மலச்சிக்கல்

கோடைக்காலத்தில் மலச்சிக்கலால் சிலர் அவஸ்தைப்படுவார்கள். இந்த மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டுமானால், மிளகு நீரை தினமும் இரு வேளைப் பருக வேண்டும். இதனால் குடலியக்கம் சீராக இருக்கும்.
உடல் வறட்சி

வெயில் காலத்தில் வேகமாக உடல் வறட்சியடையக்கூடும். இப்படி உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு குறைந்து, அதனால் மிகுந்த சோர்வையும், இதர பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் மிளகு நீரை காலையில் ஒரு டம்ளர், இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் என பருக உடல் வறட்சியைத் தடுக்கலாம்.
எடை குறையும்

கோடைக்காலத்தில் எடையைக் குறைக்க மிளகு நீர் மிகவும் உதவியாக இருக்கும். மிளகில் உள்ள காரத்தன்மை, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, குறைந்த காலத்தில் அதிக கலோரிகளை வேகமாக கரைக்க உதவும். எனவே எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த மிளகு நீர் ஓர் சிறந்த பானம்.
பசியைக் கட்டுப்படுத்தும்

உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் உணவின் மீதுள்ள அதிகப்படியான நாட்டம் தான். ஆனால் மிளகு நீரை ஒருவர் தினமும் 2 வேளை பருகினால், பசியைக் கட்டுப்படுத்தி, உணவின் மீதுள்ள அதிகப்படியான நாட்டத்தைக் குறைக்கும்.
எலும்புகளுக்கு நல்லது

எலும்பு பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பது, எலும்புகளுக்கு நல்ல பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.
முக்கியமாக மிளகு நீர் பலரையும் வாட்டும் நோய்களான புற்றுநோய் மற்றும் நீரிழிவைத் தடுக்கும். எப்படியெனில் மிளகு நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே ஆரோக்கியமாக வாழ இந்த மிளகு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மிளகு தண்ணீர் தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அத்துடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் 1-2 ரோஜாப்பூ இதழ்களை சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும்.
உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க எலுமிச்சை, மிளகு மற்றும் உப்பை எப்படி பயன்படுத்தி வந்தனர் என்பது குறித்தும், அவை எந்தெந்த பிரச்சனைகளைக் குணப்படுத்தும் என்றும் கொடுத்துள்ளது.

மூக்கடைப்பு

வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதால், உடலினுள் வெப்பம் தூண்டப்பட்டு, சுவாசக் குழாய்களில் உள்ள அழற்சிகள் நீக்கப்பட்டு, மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தொண்டைப்புண்

தொண்டைப்புண் அல்லது தொண்டை கரகரப்பு இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பித்தக்கற்கள்

பித்தக்கற்கள் இருப்பவர்கள், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், சிறிது ஆலிவ் ஆயில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், பித்தக்கற்கள் கரையும்.
எடை குறையும்

தினமும் காலையில் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்களை கரைக்கும் செயல் வேகப்படுத்தப்பட்டு, உடல் எடையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
பல் வலி

பல் வலியால் கஷ்டப்படுபவர்கள், இந்த கலவையால் தினமும் வாயைக் கொப்பளித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை கிருமிகளை அழித்து, பல் வலியில் இருந்து நிவாரணம் தரும்.
காய்ச்சல்

காய்ச்சல் இருக்கும் போது, சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், தேன் சேர்த்து கலந்து குடித்து வர, உடலைத் தாக்கிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து, காய்ச்சலில் இருந்து விரைவில் குணமாகலாம்.

குமட்டல்

உப்பு மற்றும் மிளகுத் தூள் வயிற்றில் உள்ள அமிலங்களை நீர்க்கச் செய்யும், எலுமிச்சையின் மணம் குமட்டலைக் குறைக்கும். மொத்தத்தில் இந்த கலவையை எடுத்து வர வயிற்றுப் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

Previous வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு பாருங்கள்
Next பக்க விளைவு இல்லாத இயற்கை கருத்தடை மருந்துகள்

You might also like

மருத்துவம்

பெண்களுக்கு ஏற்படும் அந்த நோய்க்கு உடனடி இயற்கை தீர்வு இதோ..!

சிலருக்கு இந்த நோய் இருக்கும் ஆனால் கண்டுகொள்ள மாட்டாங்க ஆனால் இது கூட கொஞ்சம் ஆபத்தானது தான். கவனிக்காமல் விட்டால் பின் வரும் அதிகான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்…! அதற்காக தான் இயற்கை மருத்துவ முறைகள்..! . பெண்களை

மருத்துவம்

இந்த இடங்களில் விரலை வைத்து மசாஜ் செய்யுங்கள் ..! அதிசயம் பாருங்கள்..!

நாம் மசாஜ் செய்வது என்றால் உடனடியாக வெளியே சென்று விடுகிறோம் அதற்காக கணக்கின்றி பணத்தையும் செலவு செய்கிறோம் பலன் கிடைத்ததா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை . வீட்டில் இருந்த படியே இதை மட்டும் செய்யுங்கள் பின் பாருங்கள்..! எமது உடலில்

மருத்துவம்

இத்தனை நோய்க்கும் தீர்வாகிறது இந்த மூன்று பொருட்கள்..! கண்டிப்பாக படியுங்கள் பகிருங்கள்…!

அனைவருக்கும் தேவையான மிக முக்கியமான மருத்துவ குறிப்புகள் .படித்து பகிர்ந்து பயன் பெறுங்கள்..! பல நோய்களை குணமாக்கும் ஓர் அற்புத மருந்து! வெந்தயம். – 250gm ஓமம் – 100gm கருஞ்சீரகம் – 50gm மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம்